எழுத்தாளர்: சூர்யமித்திரன்
ராணியாட்டம் இருந்த தன்
மனைவி சுகிர்தராணியை இழந்த துக்கத்தில் இருந்தார் அருண்.
“எப்பவும் அவர்களையே
நினைத்திருக்கிய..வா!நாம்
‘செஸ்’விளையாடுவோம்” அழைத்தார் நண்பர் ராமு.
ஆட்டத்தின் போக்கில்
வெள்ளைக்காய் நகர்த்திய
அருண் ராணிக்கு ‘செக்’.
கைகட்டிய படியே,தனது
ராணியை இழக்க விரும்பாமல்
அடுத்தடுத்த மூவ்களில் கவனம் செலுத்த,
ராமு அந்தசெஸ்போர்டு
டீப்பாய் கீழ் அறையில் இருந்த சிகரெட்டை, சிகார்
லைட்டை குனிந்து எடுக்க முயற்சிக்கும்போது கரண்ட் கட்.
இருட்டில் நிமிர்ந்த ராமுவின் மறு கை தட்டிவிட
செஸ் காய்கள் கலைந்து போனது.
அந்த இருட்டிலும் அருணின் வெட்டுப்பட இருந்த
ராணி ,வெள்ளை நட்சத்திரமாக
உயிர்ப்புடன் ஜ்வலித்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: