ஆகர்ஷிய அகமுகா ❤️38

by Nirmal
4 views

சரியாக இரு வாரங்கள் கடந்திருந்தன, நிமிஷாவின் கன் ஷூட் சம்பவம் நடந்தேறி.

வீட்டிலிருந்தவர்களுக்கு டிமிக்கி கொடுத்து அகனோடு பைக் ரைட் போன செல்லத்தை அலேக்காய் கூட்டி போய் நிறுத்தினான் நாயகன் அவன் கடற்கரையின் முன்.

”அகன், எதுக்கு இப்போ இங்க வந்தோம்?!”

என்ற வக்கீலம்மாவோ ஆச்சரியம் கொண்டு பைக்கிலிருந்து கீழிறங்க, சுற்றத்தை வேடிக்கை பார்த்து நின்றவளின் கரம் பற்றி விருட்டென அவளை அவன் நோக்கி இழுத்தான் அகன்.

”ஹ்ம்ம்.. உன்னே..”

என்றவன் கிறக்க தொனியில் வாக்கியத்தை நிறுத்த, மங்கையின் விழிகளோ ஆணவன் பார்வைகளில் ஸ்தம்பித்து நின்றது.

”மரத்துலே கட்டிப்போட்டு..”

என்றவனோ தொடர்ந்து சொல்லி, அரிவை அவள் முகத்தை இருக்கரங்களில் இறுக்க,

”கட்டிப்போட்டு?!”

என்ற நாயகியின் குரலோ பாதியிலேயே காணாது போக, நூலிடை இடைவெளியை கூட இருவருக்குள்ளும் இல்லாது ஆக்கியிருந்த ஆளானோ, ஆயிழையின் நுதல் முட்டி,

”கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்ச போறேன்!”

என்று ரகசியமாய் சொல்லி முகிழ்க்க, அகமுகனின் வார்த்தைகளில், சத்தமின்றி முறுவலித்த முற்றிழையோ, அவனை காதலோடு பார்த்தாள்.

”லவ் யூ கோழி குஞ்சு!”

என்ற அகனோ, பாவையவள் நாசியை மெல்லமாய் உரச, 

”லவ் யூ டூ அகன்!”

என்ற வஞ்சியோ, இருவர் இதழ்களையும் ஓரிதழாக்க விரும்பியவளாய், மூடினாள் இமைகளை மெதுவாய்.

சுந்தரியின் செயல்களை உதடுகளை மடக்கி நமட்டு சிரிப்பு சிரித்தப்படி பார்த்த அகனோ, பட்டென தாரகையின் கன்னத்தில் இச்சு வைத்தவனாய் ஓட்டமெடுத்தான் அவளிடமிருந்து பிரிந்து.

ஏமாந்த நங்கையோ நயனங்கள் விரித்து,

”ராஸ்கல்! உன்னே என்ன பண்றேன் பாரு! ஏமாத்திட்டா ஓடறே?!” 

என்றப்படி அகனை பின்னோக்கி விரட்டி ஓட, துரத்தி வருபவளை திரும்பி பார்த்து சிரித்த ஆளனோ,

”இவ்ளோ ஆர்வம் ஆகாது லாயரம்மா! ரொம்ப அவசரப்படறீங்க நீங்க!”

”போடா டேய்!”

என்றவளோ அவனை நெருங்கி மூச்சு வாங்கி நிற்க,

”போடாவா?!”

என்றவனோ தள்ளாடியவளை இழுத்து அவன் கைகளுக்குள் அடக்கி, நறுதுதலின் கழுத்தோரம் அவன் முகங்கொண்டு கிச்சில் மூட்டி விளையாட,

”நோ! அகன், நோ! ஐயோ! அகன்!”

என்ற நிமிஷாவோ சத்தம் போட்டு சிரித்தாள் வாய்விட்டு.

”கனவுலே கூட நினைச்சிருக்க மாட்டல்லே, என்ன போய் லவ் பண்ணுவன்னு?!”

என்ற அகனோ, அவளோடு சேர்ந்து சிரிக்க,  

”சரி நீங்க சொல்லுங்க, முதன் முதலா என்னே கோர்ட்லே பார்க்கும் போது என்ன நினைச்சீங்க?”

என்ற நிமிஷாவோ கால்களை முட்டி ஓடிய அலைகளில் சிலிர்த்தவளாய், ஆணவன் கரங்கள் மேல் கொண்ட அவள் கைகளை மேலும் இறுக்க,

”இந்த போடு போடறாளே இவளே நாமே எப்போ போடறதுன்னு!”

என்ற அகனோ சீரியஸ் தொனியில் பேடையின் செவியில் நக்கலடிக்க,

”அடப்பாவி! அப்போ கெட்டவனா நீ?!”

என்ற துடியிடையோ பொய் கோபம் கொண்டவளாய் வலப்பக்கம் தலை திருப்பி ஆணவன் முகம் பார்க்க,

”நான் எப்போ நல்லவன்னு சொன்னேன்?!”

என்ற அகனோ, அம்மணியை மொத்தமாய் அவன் பக்கம் திருப்ப,

”சரி! இதே நாமே லவ் பண்ணாமே இருந்திருந்தா அப்போ என்ன பண்ணிருப்பீங்க?!”

என்ற கோமகளோ அகனின் இடையில் கரங்கள் கோர்க்க,

”வேறென்னே?! கையிதான்!”

என்றவனோ டபுள் மீனிங்கில் கிண்டலை தொடர, 

”என்னே?!”

என்று ஊடல் கொண்ட கோழி குஞ்சோ அகனின் புறங்கையை கிள்ள,

”ஹான், உன்னே தூக்கிட்டு போய் ரேப் பண்ணிருப்பேன்னு சொன்னேன்!”

”அப்போ காமக்கொடூரனா நீ?!

”ஆமாடி! வத்தச்சி!”

என்றவனோ காதலியை தூக்கி சுத்த, 

”விட்றா ராஸ்கல்!”

என்ற மெல்லியாளோ அவனோடு சேர்ந்து சிரித்திட ஆரம்பித்தாள்.

நடந்து முடிந்த சம்பவத்தை எண்ணி தனியே புன்னகையில் கொலு கொண்டிருக்கும் கோமகளின் அருகில் வந்து நின்றான் அகமுகன்.

”என்ன மேடம் ஒரே சிரிப்பா இருக்கு?! என்ன கதை?!”

என்றவன் கேட்ட கேள்விக்கோ,

”எப்போ அகன் நாமே கல்யாணம் பண்ணிக்க போறோம்?!”

என்ற நிமிஷாவோ வேறொரு வேள்வியெழுப்பி பால்கனி கம்பிகளில் முதுகு ஒட்ட சாய்ந்து நின்றாள்.

”இப்போ கூட எனக்கு ஓகேதான்! ஆனா, எம்டனை நினைச்சாதான்..”

என்றவன் இழுக்க,

”ஏன், சூச்சு வருதா?!”

என்ற தெரிவையோ இம்முறை அகனை கிண்டலடித்து சிரிக்க, 

”கோழி குஞ்சுக்கெல்லாம் வாய் நீளும்னு நான் என்ன கனவா கண்டேன்!”

என்ற அகனோ இறுக்கமான முகத்தோடு ஜோக்கடிக்க,

”கொழுப்புடா உனக்கு! கொழுப்பு!”

என்றவளோ அவன் கன்னங்களை விரல்களால் பிடித்தாட்டினாள் சிரிக்க,

”நீங்க ஒத்துழைச்சா உடனே குறைச்சிடலாம் டார்லிங்! சோஃபா வேறே வா, வாங்குது! எப்படி?!”

என்றவன் நக்கலுக்கு நாணத்தை பதிலாக்கிய அந்திகையோ, மறைத்த முறுவலோடு வரவேற்பறை நுழைய, அவள் கரம் பற்றி மார் இடிக்க திருப்பிய நாயகனோ புருவங்கள் உயர்த்தி விஷம புன்னகை கொள்ள, அவனை மோகப்பார்வை பார்த்த அலரோ விழிகள் தாழ்த்தாது இதழொத்தினாள் ஆணவன் சட்டைக் கொண்ட இடமார்பில்.   

தனியார் அப்பார்ட்மெண்ட் வீடொன்றுக்கு நிமிஷாவை அழைத்து வந்திருந்தான் அகன், வார இறுதியில் தொந்தரவின்றி காதல் செய்ய.

துரித உணவை ஆர்டர் போட்டு வரவைத்திருந்தவனோ, சூப்பரான ஆங்கில படமொன்றை நெட்பிளிக்சில் தேடி எடுத்து வைத்திருந்தான், அவனின் கோழி குஞ்சோடு சேர்ந்து பார்த்திட.

கைகளை கழுவிக் கொண்டு வந்த தளிரோ, சோபாவில் சென்றமர, அலறியது மேஜை மீதிருந்த அகனின் அலைப்பேசி.

”யாரு நிமிஷா?!”

என்றவனோ கிளாஸ்களில் ஐஸ் கட்டிகளை நிரப்பியப்படி கேட்க, 

”அன்புன்னு போட்டிருக்கு அகன்!”

என்றவள் சொல்லி முடிக்கும் முன், அவளை நெருங்கி போனை கையில் வாங்கிய நாயகனோ அதை காதில் வைத்தான்.

”சொல்லு மச்சான் ?!”

”டேய், எங்கடா இருக்க நீ?!”

”ஏன்டா அலர்றே? நிமிஷா கூட இருக்கேன்!”

என்றவனோ பால்கனி பக்கமாய் போய் அதன் கதவை இழுத்து சாத்தினான்.

”நிமிஷா கூடையா?! உன்னே கொல்ல போறேன் பாரு! கப்பல்லே தானே இருப்பேன்னு சொன்னே?!”

என்ற நண்பனோ ஆத்திரத்தில் அகனை கடிக்க,

”ஆமா! அதுக்கு என்னடா இப்போ?!”

என்றவனோ பால்கனி விளிம்போரம் நின்று ரோட்டில் போவோர் வருவோருக்கு டாட்டா காட்டினான். 

”என்னவா?! என் வேலைக்கு உலை வைக்க முடிவு பண்ணிட்டியா நீ?!”

என்ற அன்போ தொடர்ந்து ஆதங்கம் கொள்ள,

”சே! சே! நான் போய் அப்படி பண்ணுவேனா?!”

என்ற அகனோ, கையசைத்து வழியனுப்பியது போதாதென்று பறக்கும் முத்தங்களை கொடுத்திட ஆரம்பித்தான் சாலை பயணிகளுக்கு. 

”நீ பண்ணுவேடா! நீ பண்ணுவே! நம்ப டீம் ஜூனியர் பொண்ணுக்கிட்டே லவ் லெட்டர் கொடுடான்னா, ட்ரைனிங் கொடுக்க வந்த டி.ஐ.ஜி. பொண்ணுக்கிட்ட லெட்டர் கொடுத்து என்னே ஐம்பது ரவுண்டு திடலே ஓட விட்டவன்தானே நீ!”

என்ற கடமைக்காரனோ பழசை சொல்லி காண்டாக,

”மச்சான், இன்னுமாடா அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கே?!”

என்றுக் கேட்டு சிரித்த அகனோ, திரும்பி பால்கனி கதவைத் திறந்து அவனின் நிமிசு குட்டியை எட்டி பார்த்தான்.  

”உனக்கென்னப்பா, ஓடாது நான்லே! அப்போ, நான்தானே நடந்ததையெல்லாம் மறக்காமே இருக்கணும்!”

என்ற தோழனோ கடுப்பு கொள்ள,

”அது சரி!”

என்ற அகனோ, சோபாவில் அமர்ந்து போன் நோண்டிக் கொண்டிருந்த சுந்தரியை கண் கொட்டாது பார்த்து சைட் அடித்தான்.   

”இதை விடுடா! அவனுங்க எங்கடா?!”

என்ற அன்போ அவனுக்கு தேவையானதை பற்றி விசாரிக்க,

”அங்கதான்!”

என்ற அகனோ, அவன் விடாது பார்ப்பதை உணர்ந்த முற்றிழை குட்டி தலையணை ஒன்றை எடுத்து முகத்தை மறைக்க கண்டு சத்தமின்றி சிரிக்க,  

”அங்கதான்னா?! எங்கடா?!”

என்ற பொறுப்பாளியோ மறுமுனையில் பதறினான்.

”கப்பல்லே தான்டா!”

என்ற அகனோ, நிமிஷா முகம் காட்டா வண்ணம், சோபாவில் அங்கும் இங்கும் திரும்பி அமர்ந்து செய்யும் அழிச்சாட்டியத்தை ரசித்தான்.

”பைத்தியமாடா உனக்கு?! நீ இங்க நிமிஷா கூட இருக்கும் போது, கப்பல்லே யாருடா அவனுங்க கூட இருக்கறது?!”

என்ற அன்போ கதத்தில் அதிர்ச்சிக் கொண்டான்.

”வேறே யாரு, பெருசும், டி.ஜே.வும்தான்!”

என்ற அகனோ, பால்கனி கண்ணாடியிலேயே தாளம் போட,  

”மச்சான் என்ன விளையாடறியா?! அவுங்க ரெண்டு பேரும் பெரிய பயில்வானுங்க! அவுங்களே நம்பி அந்த முள்ளமாரிகளே விட்டுட்டு வந்திருக்கேன்னு சொல்றே?! ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டா, அவ்ளோதான்டா மச்சான் நாமே!”

”ஏன்டா, பயப்படறே! அப்படியெல்லாம் ஒன்னும் ஆகுதுடா! பாக்ஸ்லே போட்டு நல்லா கட்டி வெச்சிட்டுத்தான் வந்துருக்கேன்!”

”பாக்ஸா?! என்னடா பாக்ஸ்?!”

என்ற அன்போ அதிர்ந்து கேட்க,

”ஐஸ் பாக்ஸ்!”

என்ற அகனோ கூலாய் சொன்னான்.

”அடேய்! உன்னே நம்பனத்துக்கு எனக்கு கடைசியா களிதான்னு கன்போர்ம் பண்ணிட்டியாடா?!”

என்ற போலீஸ்காரனோ பரிதாப தொனி கொள்ள,

”விடு மச்சான்! எம்டன்கிட்ட சொல்லி, சகல வசதிகளையும் பண்ணி கொடுக்கறேண்டா!”

என்ற அகனோ வரவேற்பறை எட்டி பார்த்து தலையாட்டி சிரித்துக் கொண்டான், நிமிசு தூங்கிப்போக கண்ட காட்சியில்.

”மண்ணாங்கட்டி!”

என்ற அன்போ மறுமுனையில் கத்த,

”டென்சன் ஆகாதடா! நல்லா துவைச்சு, ஐஸ்சே பாதி பாக்ஸ் வரைக்கும் நிறைச்சு, உள்ளே பதப்படுத்தி வெச்சிருக்கேன் மச்சான்! எப்படியும் ஐஞ்சாறு மணி நேரமாவது ஆகும், தெளிய!”

என்ற நாயகனோ மிகச் சாதாரணமாய் சொல்ல,

”டேய், ஹைப்போதெர்மியா வந்து செத்துடா போறானுங்கடா!”

என்ற காக்கி சட்டைக்காரனோ பதற்றம் கொள்ள,

”விட்றா! நாட்டு தியாகிகளா என்ன, முடிச்சவிக்கிங்கத்தானே?!”

”நீ சொல்லுவப்பா! நீ யாரு!”

என்ற அன்போ சலித்துக்கொள்ள,

”மூஞ்சு காமிக்காமே, நான் சொல்றதை நல்லா கேளு! அவனுங்க என்ன டார்கெட் பண்ணித்தான் நிமிஷா வீட்டுக்கு போயிருக்கானுங்க! ஆனா, நிமிஷாவே சுட்டது அவனுங்க இல்லே!”

”அப்போ, நாமே முதல்லே கணிச்ச மாதிரி அந்த இன்னோர் குரூப்தான் எல்லாத்துக்கும் காரணமா?!”

”இல்லே! மூணாவதா ஒருத்தன் இருக்கான்!”

”என்னடா சொல்றே?!”

”நிமிஷா என் கூட வீடியோ கோல் பேசும் போது, கேபினெட்லே சின்னதா ஒரு ஹோல் பார்த்தேன்!”

”அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?!”

”இதுக்கு முன்னாடியும் அந்த அலமாரிக்கிட்ட சாஞ்சி நின்னு நிமிஷா என்கிட்ட பேசி இருக்கா! அப்போ அந்த ஹோல் அங்க இல்லே! கன் ஷூட் நடக்கற அன்னைக்கு வரைக்கும் கூட, அப்படி எதுவுமே அங்க இல்லே!”

”புரிஞ்சிருச்சு மச்சான்! இதுக்கு மேலே நான் பார்த்துக்கறேன்! நீ என்ஜோய் பண்ணு!”

என்ற அன்போ சீரியஸ் குரலோடு அழைப்பைத் துண்டித்தான்.

அகமுகனோ வீட்டுக்குள் ஓடினான் பால்கனி கண்ணாடியை திறந்து, நிமுசுவை எழுப்பி விளையாட.

ஆகர்ஷிக்காதே அகமுகா…

You may also like

Leave a Comment

error: Content is protected !!