ஆகர்ஷிய அகமுகா ♥️ 58

by Nirmal
1 views

மணி விடியற்காலை நான்கு நாற்பது.

அகமுகனுக்கு துயில் கண்ணை எட்டி பார்த்திடவில்லை.  குப்பிறக்கிடந்தவன் பக்கமோ போன் மல்லாக்க இருந்தது. அதிலிருந்து மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது.

நிம்மதி பெருமூச்சு கொண்டவன் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேற்பட்டு சூடாகி போயிருந்த அலைபேசியின் அழைப்பை கட் செய்தான். அப்படியே போனையும் சேர்த்தே ஸ்விட்ச் ஆப் செய்து தலையணைக்கு அடியில் நகர்த்தி விட்டு மஞ்சத்திலிருந்து மேலெழும்பினான்.

நேராய் வாஷ் பேஷன் நோக்கி முகத்தை நீராடித்து கழுவி கொண்டான். பின், சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு, கீழ் தளம் விரைந்தான். பரத்தின் பைக் சாவியை கைப்பற்றினான். அழுத்தினான் பைக்கை அவன் மனம் போக சொன்ன இடம் நோக்கி.

அரை மணி நேரத்தில் விரும்பிய இடம் வந்து சேர்ந்தான் அகன் பங்களா வீட்டின் பின்புறத்தில் பைக்கை மறைவாய் நிறுத்தி ஒளித்து வைத்தவன் திட்டத்தை திறம்பட நிறைவேற்றிட ஆரம்பித்தான். சுற்றம் முழுவதும் இருட்டாய் இருக்க, யாருமில்லா சாலையை ஒருமுறைக்கு இருமுறை ஸ்போட் செக்கிங் செய்தான் நாயகன் அவன்.

பின், அங்கிருந்த செங்கற்களை எடுத்து வரிசையாய் ஒன்றின் மீது மற்றொன்றை வைத்து அடுக்கினான் ஆணவன். அவன் எகிறி உள்ளே குதித்திடும் அளவில் உயரம் வந்ததும், வந்த வேலையை செவ்வென செய்தான் அகன்.

தோட்டது பக்கம் எங்கே ஏணி இருக்கும் என்று நன்கறிந்தவன், அதன் மூலம் நிமிசு குட்டியின் படுக்கை அறை இருக்கும் பால்கனி நோக்கி மேலேறினான். அம்மணியின் படுக்கையறை கதவோ அவனை லோக் செய்த நிலையில் வரவேற்க, அவனுக்கு தெரிந்த கைவித்தைகளால் அதனை சத்தமின்றி திறந்து உள்ளே சென்றான் ராஸ்கல் அவன்.

போர்வைக்குள் கொலு கொண்டிருந்த காதலியை, இதழோரம் இழைந்தோடிய புன்னகையோடு இமைக்காது பார்த்தான் அகமுகன் அவன் நெஞ்சுக்கு குறுக்கே கரங்களை கட்டியப்படி தூணோரம் நின்று.

அன்றொருநாள் முற்றிழை அவள் தவறிப்போன குழந்தையை நினைத்து காரில் கதறி அழுத சம்பவம் மீண்டும் அவன் ஞாபகத்திற்கு வர, மூச்சை இழுத்து விட்டவன் பூனை அடிகள் கொண்டு தளிரவள் படுத்திருந்த பஞ்சணையை நெருங்கினான்.

ஒருக்களித்து படுத்திருந்த அம்மணியின் இடக்கை உள்ளங்கை மல்லாக்க திறந்திருக்க, அதை உரசாது சுந்தரியின் முகம் பார்த்திடும் வண்ணம் குப்பிறப்படுத்துக் கொண்டான் அகன்.

இமைக்காது ஆணவன் அவளையே பார்க்க, என்ன உணர்ந்தாளோ வஞ்சி மகளவள் தெரியவில்லை. ஆனால், அவன் வாசனை நாசியை தொட்டு திட்டிகளை திறக்க வைக்க, மெதுவாய் விலோசனங்களை விரித்தாள் ஏந்திழை அவள்.

வைத்த கண் வாங்காது பார்த்திருந்த காதல் கண்ணாளனை பார்த்து மென்புன்னகை கொண்டாள் அதரங்கள் பிரிக்கா முற்றிழை அவள்.

கனவா நிஜமா என்றறியா அகனோ சிரித்தவளை நோக்கி உதடுகள் மடக்கிய வெட்க பார்வை வீச, நேத்திரங்கள் திறந்த துயிலில் மிதந்த நேரிழையோ கண்ணசைத்து அவனை அருகில் வரும்படி அழைத்தாள்.

நாணி கிடந்த நாயகனோ, முடியாதென்று தலையை லேசாய் ஆட்ட, வாய் குவித்து சொன்னாள், சேயிழை அவள், சைகையில் ”லவ் யூ’ என்று.

கழுத்துக்கு கீழ் இருக்கரங்களையும் பதுக்கியப்படி படுத்திருந்த அகனோ அவளின் ‘லவ் யூ’வை வேண்டாமென்று சிரசை ஆட்ட, வாய் குவித்து முத்த சைகை செய்தாள் நறுதுதல் அவள். கிறக்கத்தோடு அவளை பார்த்தாலும், அதற்கும் வேண்டாமென்று கபாலத்தை ஆட்டினான் அகன். 

ஆனால், அவன் ‘நோ’ வை பெரிதாய் மதித்திடாத நாயகியோ நீட்டியிருந்த இடக்கையால் சைகை செய்து அகமுகனை, அவள் நோக்கி வர சொல்லி சைகை செய்தாள். 

இவ்வளவு நேரம் தலையை லெஃப்ட் ரைட் என்று ஆட்டிக்கொண்டிருந்த ஆடவனோ,  மடக்கிய அதரங்களை இழைந்தோட விட்டு குறுஞ்சிரிப்பு ஒன்றோடு அவள் உள்ளங்கையில் கன்னம் பதித்தான்.

அஞ்சுவின் கருக்கலைப்பு தகவல் அகனை என்னவோ செய்தது. மாதவன் வெளிநாட்டு பிஸ்னஸ் மீட்டிங் ஒன்றுக்கு போயிருக்க, அவனை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால் சோகத்தை சொல்லி அழ மாஜி பொண்டாட்டிக்கு துணை ஒன்று தேவைப்பட்டது.

அவளை நன்றாக கரைத்து குடித்திருந்த அகன்தான் அதற்கு சரியானவனாக இருப்பான் என்று எண்ணியவள் போனை போட்டு சங்கதியை தெரியப்படுத்தி, அவனை நேரடியாக சந்திக்க முனைந்தாள்.

ஆனால், அகனோ சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டான், அலைபேசி வழியாகவே அவளை சமாதானம் செய்து. அழுது ஓய்ந்த அஞ்சுவை உறங்க வைத்த முன்னாள் புருஷனுக்கோ ஏனோ எண்ணம் முழுக்க நிமிசு குட்டியின் பழைய கண்ணீர் சம்பவம் ஒன்றிலேயே வந்து நின்றது.

அதை துரத்திட நினைத்தவனுக்கு தூக்கம் போனதுதான் மிச்சம். அங்கணையை பார்த்திட நாயகனின் மனம் துடியாய் துடித்தது. நேரடியாக பலமுறை போய் பல்ப் வாங்கி வந்தவன் இம்முறை நேர்மையை கைவிட்டு கள்ளத்தனத்தில் இறங்கினான்.

முன்னாடியே கூட இதை அவன் செய்திருக்கலாம். ஏன், நிமிஷாவும் கூட இதையேத்தான் விரும்பினாள். ஆனால், அப்போதைக்கு அகன் நல்லவனாகவே இருக்க விரும்பினான். ஆகவே, வாலை சுருட்டி வைத்திருந்தான்.

ஆனால், நெஞ்சை பிசைந்த ஞாபகங்ககோ அவனை எல்லை மீறிட வைத்தது. ஆகவே, ஓடோடி வந்து சுவர் எகிறி குதித்து விட்டான் நாயகன். 

அம்மணியின் கை சூட்டில் உறக்கம் கொண்ட அகமுகன் அலாராம் அடிக்காதே காலை எட்டு மணிக்கு விழிப்புக் கொண்டான். கண் திறந்தவன் நெஞ்சோ ஒருபக்கமாய் பாரம் கொண்டிருக்க, கபாலத்தை லேசாய் கீழிறக்கி பார்த்தவன் இதழ்களோ குறும்பில் வளைந்தன.

ஆணவனின் கோழி குஞ்சு, அவன் நெஞ்சில் துஞ்சிக் கிடந்தாள். உதடுகளை ஈரமாக்கிக் கொண்டவன், சுருண்டுக் கிடந்தவள் தலையை மெதுவாய் மஞ்சத்தில் கிடத்தி, எழுந்து வாஷ் ரூம் நோக்கினான்.

முகத்தை நீரடித்து கழுவிக் கொண்டவன், அங்கிருந்த டவலால் வதனத்தை துடைத்துக் கொண்டு, பால்கனி பக்கம் போய் நின்றான்.

தோட்டத்து ஆட்கள் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, நெட்டி முறித்தவனோ அவர்கள் பார்க்க, கையை ஆட்டி அனைவருக்கும் டாட்டா காண்பித்து மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

மேஜை மீதிருந்த ஆடவனின் போனை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன்,

”என்ன நடந்தாலும் சரி, நான் கோபமாத்தான் இருக்கேன்! கோச்சிக்கிட்டுதான் போறேன்!”

எனக்கூறி வாயை வெட்டி இழுத்துக் கொண்டவனாய் அங்கிருந்து வெளியேறினான்.

அகன் மேல் தளத்திலிருந்து மாடிப்படியில் கீழே இறங்கி வருவதை கண்ட பார்வதி அம்மாவின் கண்கள் அகல விரிய, காலை சிற்றுண்டி உண்டுக் கொண்டிருந்த எம்டனுக்கோ ஹார்ட் அட்டாக் வந்திடாத குறைதான்.

அவர் பார்வையே, ஆணவனை நீ ஏன் மேலிருந்து கீழிறங்கி வருகிறாய் எனக்கேட்கும் தோரணையில் முறைக்க,

”மோர்னிங் மாமனாரே! நான் எப்படி இங்கன்னு பார்க்கறீங்களா?!”

என்றவனோ டைனிங் டேபிளின் மீதிருந்த சமோசா ஒன்றை எடுத்து கடித்தப்படி,

”வீட்டு முன்னாடி மட்டும் செக்கியூரிட்டி போட்டா பத்தாது மாமனாரே! பின்னாடியும் போடணும்! ஆனா, என்ன மாதிரி ராஸ்கல் எப்படியும் உள்ளே வந்திடுவான்!”

எனக்கூறி சிரித்து,

”வரட்டா ஜட்ஜ் ஐயா! ரொம்ப டயர்டா இருக்கு! ஓவர் டியூட்டி பார்த்தது!”

என்றவனோ ஜக்கிலிருந்த காஃபியை கப் ஒன்றில் ஊற்றி குடித்து,

”ஹான், பார்வதி அம்மா ரூம்லே கெர்டன்ஸை தடுப்பா போடுங்க! பார்போமான்ஸ் பண்ணும் போது கூச்சமா இருக்குள்ளே! எவனாவது வீடியோ எடுத்து போட்டுட்டா என்ன பண்றது?!”

எனத்தொடர்ந்து எம்டனின் பீபியை ஏற்றி, தின்றவை செரிக்க, ஏப்பம் ஒன்றையும் எடுத்து அங்கிருந்து காலரை தூக்கிவிட்டு கிளம்பினான்.

மேல் தளத்தில் நின்றப்படியே, அகன் அடித்த கூத்தை பார்த்த நிமிஷாவிற்கோ சிரிப்பை அடக்கிட முடியவில்லை.

”செத்த குருவிக்கு சீனை பார்த்தியா! இருடா ராஸ்கல் உன்னே வெச்சுக்கறேன்!”

என்றவளாய் முனகி அவள் அறைக்குள் சென்று புகுந்தாள் பகினி அவள். 

அகன் பெண்ணவளை மார்பிலிருந்து விலக்கி பஞ்சணையில் படுக்க வைத்திடும் பொழுதே துயில் கலைந்து விட்டாள் கோமகள் அவள். அவன் ஊடலாய் சொன்ன வார்த்தைகளைக் கூட போலி நித்திரையின் ஊடே கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் கள்ளியவள்.

அந்த வாரத்தின் ஞாயிறு மாலையேதான், கெத்தாய் பைபை சொல்லி போன அகன் மறுபடியும் அவன் டேடியோடு வந்தான் தட்டுகளோடு நற்செய்தி சொல்ல எம்டன் வீடு தேடி.

அசிங்கப்படுத்திய எம்டனை வார்த்தைகளால் மூக்குடைத்த நாயகனோ வந்த வேலை முடிய கிளம்பிய நொடி, நண்பன் நவீனோடு வெளியில் போயிருந்த காரிகையோ இல்லம் திரும்பி கண்டாள், வரவேற்பறை காஃபி டேபிளில் சிரித்திருந்த தட்டுகள் ரெண்டை.

இருந்தும், அவைகளை பெரிதாய் கண்டுக்காது மாடிப்படி ஏறிவிட்ட அம்மணியை கயிறு போட்டு இழுத்திடாத குறையாய் தட்டிலிருந்த மாம்பழ வாசம் கொக்கி போட்டு சோபா நோக்கி வர வைத்தது.

வஞ்சியோ வந்த வேகத்துக்கு மாம்பழத்தை கையில் எடுத்து நறுமணம் சுகித்து,

”பார்வதி மா! பார்வதி மா! இந்த மெங்கோ சாமிக்கு வைக்க போறிங்களா, இல்லே நான் வெட்டி சாப்பிட்டுக்கவா?!”

எனக்கேட்டு, தட்டில் கண்ணை கவரும் வண்ணமிருந்த கலர் அட்டையை கையில் எடுத்தாள்.

அதிலிருந்த இடம், நாள், கிழமை, நேரம் எல்லாவற்றையும் பார்த்தவளுக்கு மணமகன் மற்றும் மணமகள் பெயர்களை பார்த்ததும் ஒரே ஷாக்.

நயனங்கள் ரெண்டும் அகல விரிந்து நிற்க, சந்தேகம் கொண்டு திட்டிகளை மூடித்திறந்து, மண்டையை வேறு ரெண்டு ஆட்டு ஆட்டியவளோ, அகமுகன் மற்றும் நிமிஷா என்ற பெயர்கள் அங்கேயே குத்து கல்லாய் இருப்பதைக் கண்டு அலறினாள் ஆனந்தத்தில் பார்வதி அம்மாவை அழைத்து.

”ஓஹ்! ஓஹ்! பார்த்தாச்சா மேடம்?! எப்படி கல்யாண கார்ட்டெல்லாம் புடிச்சு இருக்கா?! இந்த புடவை, நகையெல்லாம் போட்டு பார்த்து அகன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு! சரியா?!”

”ஐயோ! பார்வதி அம்மா! பொறுங்க! பொறுங்க! என்னாலே இப்போ நிக்க கூட முடியலே! அப்படியே பறக்க மாதிரி இருக்கு! இதுலே நீங்க வேறே அதை போட்டு பாரு! இதை போட்டு பாருன்னு! என்ன கொஞ்சம் இந்த சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் விடுங்களேன்!”

என்றவளாய் வேலைக்கார அம்மாவை இறுக்கமாய் கட்டிக்கொண்டு ஊஞ்சலாட,

”நல்லவேளை நான் காப்பாத்தி வெச்சேன் உன் சந்தோஷத்தை! இல்லன்னா, ஐயா எப்போவோ இதையெல்லாம் பறக்க விட்டுருப்பாரு!”

என்றவரை அணைப்பிலிருந்து விடுவித்து,

”அகன் மட்டும்தான் வந்தாரா?! இல்லே, கூட பரத் அங்கிள் எல்லாம் சேர்ந்து வந்தாங்களா?!”

”அகனும் அவுங்க அப்பாவும் மட்டும்தான் வந்தாங்க!”

என்ற பார்வதி அம்மாவோ மாம்பழத்தோடு அடுக்களை நோக்கினார்.

”மாமா அவுங்களே..”

என்றவள் அச்சத்தோடு இழுக்க,

”அதெல்லாம் வழக்கம் போல் அமோகமா நடந்துடுச்சு! உங்க மாமா ஒன்னு சொல்ல, அகன் ஏட்டிக்கு போட்டியா பேச! கடைசியிலே, அகனும் அவுங்க அப்பாவும் எதுக்கு வந்தாங்களோ அதை நல்லபடியாவே சொல்லிட்டு கிளம்பிட்டாங்க!”

”என்ன கிறுக்குத்தனம் பண்ணிருப்பாங்கன்னு எனக்கு தெரியாது, அப்பாவும் மகனும்! இருக்கு அந்த ராஸ்கலுக்கு! கல்யாணம் முடியட்டும்!”

என்றவள் நாணத்தோடு கறுவிட,

”கல்யாணம் ரிஜிஸ்ட்டர் ஆபிஸ்லதான் போலே! உனக்கேதும் வருத்தமில்லையே?!”

என்ற பார்வதி மம்மியோ லாயர் மேடமிடம் வெட்டிய மாம்பழத்துண்டு ஒன்றை நீட்டிட,

”கனவோ நிஜமோ, காதல் மந்திரமோ”

என்ற பெண்டுவோ பழத்தை வாயில் அதக்கிக்கொண்டே பாட,

”அது சரி!”

என்று சிரித்த பார்வதி அம்மாவோ அவர் பங்கிற்கு ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள,

”ஓராயிரம் ஆண்டுகள், சேமித்த காதலிது, நூறாயிரம், ஆண்டுகள் தாண்டியும்

வாழுமிது!”

என்று பாடிக்கொண்டே மாம்பழத்துண்டுகள் நிறைந்த தட்டோடு மகிழ்ச்சி குறையாது மாடிப்பாடி ஏறினாள் நிமிஷா.

ஆண்டுகளுக்கு பின், அவளை இவ்வளவு களிப்போடு பார்த்த பார்வதி அம்மாவிற்கோ கண்களில் நீர் கோர்த்தது.

அகன்முகன் ஏற்கனவே, பதிவு திருமணம் செய்திட தேவையான எல்லா விடயங்களையும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே செய்திருந்தான்.

அரசாங்கதின் சார்பாய் எல்லாம் கைக்கூடி வந்ததும், தாமதிக்காது உடனடியாக திருமண அழைப்பிதழை பிரிண்ட் செய்து முதலில் அதை கொண்டு போய், தகப்பாவிடம்தான் கொடுத்தான்.

அவர் பார்த்து பூரித்து போக, பரத்திடம் மாடர்னான வெட்டிங் கார்டை காண்பித்தவன், அப்படியே இருவரையும் அழைத்துக் கொண்டு நேராய் நிமிஷாவிற்கான பர்ச்சேசிங் செய்திட கடைக்கு சென்றான்.

பின், டிஜேவை கல்யாண ஃபுட் டெஸ்ட்டிங்கிற்காக ரெஸ்டூரண்ட் ஒன்றில் இறக்கி விட்டுவிட்டு, பெருசோடு எம்டன் வீடு நோக்கினான்,வருங்கால மாமனாருக்கும் காதல் சீமாட்டிக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திட.

ஆகர்ஷிக்காதே அகமுகா…

You may also like

Leave a Comment

error: Content is protected !!