குடும்பம் என்னும் வங்கியில்கோடிகணக்கில் சேர்த்து வைத்தநினைவுகளும் உண்டு அதிலே சில்லறைப்போல் சிதறிய காதல் நினைவுகள். ஒருபுறம் இருக்க செல்லாக்காசு. கனவுகள் மறுபுறமுண்டு …
2024
கதிரவன் வீச்சினின்று காக்கும் தருவின்பிம்பமாய்த் தரையில்…இயற்கை எழிலைப்பெட்டிக்குள் பிடித்துப்போடும் கருவியாய்…எங்கும் எதிலும் எப்பொழுதும் எனைவிட்டுநீங்காத நிழலேநிஜமே நீயே…. நாபா.மீரா
பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
யாருமில்லா தனிமையிலும்ஒளியிருக்கும் இரவிலும்உடன்பிறப்பாய் இருப்பவனே திடப்பொருளில் உதித்தவனே!சுவரோ தரையோஆறோ குளமோ ஒளியினை தடுத்துநிழலாய் வாழ்பவனே!வண்ணங்கள் துறந்த கருநிற அழகனே! பூமலர்
ஒளிப் பயணத்திற்குகட்டணம் இல்லாதுஇலவசச் சுங்கச்சாவடியாய்தஞ்சமென வருபவரெவருக்கும்செய்கூலி சேதாரமில்லாமல்சேர்த்ததைத் தனதாக்காமல்அள்ளித்தந்து வள்ளலாய்அடுத்தவரின்பமே ஆனந்தம்ஆயுளுக்குமுழைக்கும் நிழலல்லநிஜம் நீ! ஆதி தனபால்
