வயிற்றுப் பசி தணிக்கும்அட்சயப் பாத்திரம் இவன்நிலச் சுவட்டின் சுவடுகளுடன்தன்னுழைப்பைத் தாரக மந்திரமாக்கிஇயந்திரமாக மாறிப் போனபசுமை இரகசியத்தின் ரசிகன்! ஆதி தனபால்
Category:
நவம்பர்
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
நவீனத்தின் அனாத நீ!உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்குவிலை வைக்கும் அதிகாரமில்ல!நாயின் நலங்காக்க நானூறுஅமைப்பு – நாதியில்ல உனக்கு! -கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
உழுதவன் கணக்கு பாத்தா…உழவுகோலும் மிஞ்சாது இன்னுபட்டறிவால் சொல்லி வைச்ச…பழமொழியும் உண்மை ஆச்சே…பூச்சிக்கொல்லியால பூமியை நாசமாக்கி…பசுமைப்புரட்சின்னு பம்மாத்து தேவைதானா? “சோழா “புகழேந்தி
