சமநிலையற்ற இவ்வுலகில் வெற்றிற்கானபயணம் அனைவருக்கும் ஒன்றல்ல..வஞ்சனையால் அடைந்த வெற்றியென்பதுஅங்கீகரிக்கப்படாத வெற்றியே.., தோல்விகள்உனக்கான அவமானம் இல்லை..அதுவே வெற்றிக்கான ஆரம்பம்…! ✍🏻அனுஷாடேவிட்.
வாசகர் படைப்பு
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….புதுமலர் வாசத்தோடு சிரிப்புஉழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்ஓடும் நதியினிலே சமத்துவம்மழலை மொழியினில் மகிழ்ச்சிமுடிவல்ல இது ஆரம்பம் “சோழா “புகழேந்தி
ஆரம்பமே அனைத்துயிரின் ஆதாரமாம்ஆதியது அந்தம் ஆகுமுன்னேஆக்கிடுவோம் அத்தனையும் அர்த்தமுள்ளதாய்அர்த்தமெது அறிவீரோ அகிலத்திலே அதியாழமாய் அனைத்துயிர்க்கும் அன்பளித்தலே அன்பினாலாக்குவோம் அந்தமும் ஆதியாய்..!! *குமரியின்கவி*…
பாலபருவத்தில் பள்ளி ஆரம்பம்!காளைபருவத்தில் கல்லூரி ஆரம்பம்! விடலைபருவத்தில் இல்லறம் ஆரம்பம்!முதுமகன்பருவத்தில் நல்லறவாழ்வு ஆரம்பம்!மூத்தோன்பருவத்தில் முன்னோடியாகவும்! கிழவன்பருவத்தில் நோயில்லாவாழ்வும் மனிதனின் வாழ்வின் ஆரம்பம்!!…
வாழ்வின் ஆரம்பம் கருவறையில்கல்வியின் ஆரம்பம் வகுப்பறையில்காதலின் ஆரம்பம் நெஞ்சறையில்விடியலின் ஆரம்பம் வைகறையில்விருட்சத்தின் ஆரம்பம் மண்ணறையில்முடிவும் ஆரம்பமே உலகறையில் ரஞ்சன் ரனுஜா