அலுங்காமல் புள்ளி வைத்துஅலையலையாய் அதை இணைத்துஅழகாய் கட்டமைத்தவள்அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்அலங்காரம் பூண்ட வாசல்அன்பாய் உரைத்த நன்றியில்அரும்புகிறது அவளிதழ்அமைதியான கர்வத்தில்! புனிதா பார்த்திபன்
Latest Posts
கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……
கணக்கு.கோலத்தில் கணக்கும உண்டு.ஆய.புள்ளி கணக்கு..முக்கோன கணக்கு…வட்ட கணக்கு..ஜியாமட்ரியின்அரிசவடி…! 🤝🤝✍🏾ஆர் சத்திய நாராயணன்.
வண்ணமில்லாக் கோலத்தை ஒரு வண்ண மயில் தீட்டி வாசலில் விட்டது… கங்காதரன்
கோலமிட்டவுடன் உடனே மறைந்து கொள்ள அவசியம் என்ன? நான் கோலத்தை ரசிப்பது போல உன்னையல்லவா தரிசிக்க வந்தேன்… கங்காதரன்
புள்ளிகளை இழுத்து இணைத்தது போல என்னையும் உன்னுள் இழுத்து விட்டாய்… கங்காதரன்
அதிகாலையில் தேநீர் கடைக்கு நடந்து சென்றேன் தெருவில் ஒருவீட்டின் முன் அப்படி ஒரு அழகான ஓவியம்காணக் கிடைத்தது திரும்பி வந்து பார்க்கையில்…
வாசல் தெளித்து வண்ணக்கோலமிட்டு நிமிர்ந்தேன்… இடுப்பில் சுரீர் வலி.. கோலத்தின் நிறைவை அதன் அழகைக்கண்டு மெய்மறந்து நின்றேன்… இடுப்பு வலி மாயமாய்…
கோலம்…!தமிழகமக்களின்தனித்துவகலாச்சாரம்..!!🤝🤝✍🏾ஆர் சத்திய நாராயணன்
அதிசயம்தான்பொட்டு வைத்தவிதவைக் கோலம். செ.ம.சுபாஷினி
பள்ளி சிறுமியாகபுள்ளி மானாகதுள்ளி ஆவலுடன்புள்ளிக்கோலமிட்டாள்வள்ளி என்ற பாவை திருமண வயது அடைந்து வறுமையில் வாடியதால்பொறுமை இழந்துவெறுமையாக உணர்ந்தாள். காரணம்……….பருவ வயது ஓடியதால்முதிர்…
ரங்க ,ஆவலியைஇணைத்துஅழகு படுத்தியஅவள் அழகில்மயங்கினேன்நான்!!! வாசவி சாமிநாதன்
வீட்டு வாசலுக்கு அழகு புள்ளி வைத்த கோலம்,வீட்டிற்கு அழகு பொட்டு வைத்த முகம்கோலமிட்ட வீட்டில் இறைவனின் குறுநகை தெரியும். Sudha.T
அலைபேசியில்பார்த்துக் கொண்டேமணிக் கணக்கில்மகள் போட்டநான்கு வரி கோலத்தைநான்கே நிமிடங்களில்போட்டாள் தாய் க.ரவீந்திரன்.
வண்ண மயிலேவரும் ஜென்மத்தில்வாசலாகஉன்வீட்டில்பிறக்க வேண்டும்.உன் விரல்பட்டகோலத்தை நான்சுமக்க வேண்டும்.உன் குரல் கேட்டுகூத்தாட வேண்டும்வாசலில் கோலமாய். செ.ம.சுபாஷினி
மாக்கோலம் போட்டமணிக் குயிலே!மணக் கோலம் போடவெளியே வா.தனிக் கோலம்போட்டது போதும்துணைக் கோளாய்நானிருக்கபூக்கோலத்தில்புதுக்கோலம்போடுவோம் வா. செ.ம.சுபாஷினி
