பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி
யாருமில்லா தனிமையிலும்ஒளியிருக்கும் இரவிலும்உடன்பிறப்பாய் இருப்பவனே திடப்பொருளில் உதித்தவனே!சுவரோ தரையோஆறோ குளமோ ஒளியினை தடுத்துநிழலாய் வாழ்பவனே!வண்ணங்கள் துறந்த கருநிற அழகனே! பூமலர்
ஒளிப் பயணத்திற்குகட்டணம் இல்லாதுஇலவசச் சுங்கச்சாவடியாய்தஞ்சமென வருபவரெவருக்கும்செய்கூலி சேதாரமில்லாமல்சேர்த்ததைத் தனதாக்காமல்அள்ளித்தந்து வள்ளலாய்அடுத்தவரின்பமே ஆனந்தம்ஆயுளுக்குமுழைக்கும் நிழலல்லநிஜம் நீ! ஆதி தனபால்
ஆகிறது…! சூரியனேகாரணம். நீயார்…? உயிர்இருக்கா…? உடல்இருக்கா…? கூடவேவருகிறாய்… நேசமா…..? பாசாமா…?? ஆனாலும்மோசம். இருட்டிலேமறைவாய்பிடித்தபடம்… நிழல்நிஜமாகிறது…!!! ஆர் சத்திய நாராயணன்
நிஜமில்லா நிலவுலகில்நிலையானதென எதுவுமில்லையேநிலையில்லா நிலையினிலும்நிலையெனவே நீங்காதேநிலைத்தே நிலைத்திருக்கும்நிஜத்தின் நிஜமாய்நிழலே நிஜமெனினும் நிலவொளியென நினைவினிலே நிறைவாய் நிழலெனவேநிறைந்துள்ளதுன் நட்புறவே *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
உன்னுயிராய் நானும்,என்னுயிராய் நீயும்,நகமும் சதையுமாய்,வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி மனம் வெதும்பி கூனி குறுகினேன் நீ எந்நிழலேஅன்றி நிஜமல்ல..என்றுறைத்து எனைநீங்கியவுடன்…. இப்படிக்குசுஜாதா.
உடலோடுதொடர்வது …ஒளியிலேபிறந்ததுகோடையில் தேடுவது …..குளிர்ச்சியின்முகமிதுதிரையிலேஒளிர்வதுதீண்டிடஒளிவதுநட்புக்குஉவமையிதுநடிப்புக்குசான்றானது.கனவுக்கு துணையானதுகளவுக்குஇணையானது சோழா” புகழேந்தி
நீருக்கு அடியில் பந்தை அழுத்தஎகிறி குதிக்கும் வேகமாய் பந்து!எதனையும் நோக்கி விசையுடன் எறிந்தால்எதிர்விசை இரட்டிப்பாய் கொடுத்திடும் பந்து!வீழ்ந்தாலும் எழுந்திட உணர்த்திடும் பந்து!!…
மேலேயடித்தேன் உயர்ந்தால் தாழும் தாழ்ந்ததுயருமென்றதுஎட்டியுதைத்தேன் உந்துதலே உயர்வை எட்டச்செய்யுமென்றதுகுறிபார்த்தடித்தேன் சரியான பாதை இலக்கையெட்டுமென்றதுவாழ்வைச் சொன்ன புவிக்கோளபிம்பம் ஓரத்தில்கிடந்ததுஆட்டமெல்லாம் உயிர்காற்றுள்ளவரை மட்டுமேயென பூடகமாயுரைத்தபடி!…
