அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
Tag:
வாரம் நாலு கவி
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: முதல் வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் முதல் வாரத்திற்கான (11.11.2024 – 17.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
நவீனத்தின் அனாத நீ!உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்குவிலை வைக்கும் அதிகாரமில்ல!நாயின் நலங்காக்க நானூறுஅமைப்பு – நாதியில்ல உனக்கு! -கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
உழுதவன் கணக்கு பாத்தா…உழவுகோலும் மிஞ்சாது இன்னுபட்டறிவால் சொல்லி வைச்ச…பழமொழியும் உண்மை ஆச்சே…பூச்சிக்கொல்லியால பூமியை நாசமாக்கி…பசுமைப்புரட்சின்னு பம்மாத்து தேவைதானா? “சோழா “புகழேந்தி
உழவனே உலகதன் உயிர்நாடி உயிர்களை வாழ்விக்க பயிர்(செய்தே)தேடிபயிர்களால் பலவயிறுகள் நிறைத்திடவே நிறைந்திடா வயிற்றுடன் உழைக்கிறானே உழைக்காதவன் உண்ணலாகாதென சொன்னவரும்உழைப்பவரெலாம் உண்கின்றனரா என்றறிவாரோ?!..…
