குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…
amydeepz
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஐந்தாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஐந்தாவது வாரத்திற்கான (09.12.2024 – 15.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
கதிரவன் வீச்சினின்று காக்கும் தருவின்பிம்பமாய்த் தரையில்…இயற்கை எழிலைப்பெட்டிக்குள் பிடித்துப்போடும் கருவியாய்…எங்கும் எதிலும் எப்பொழுதும் எனைவிட்டுநீங்காத நிழலேநிஜமே நீயே…. நாபா.மீரா
பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
யாருமில்லா தனிமையிலும்ஒளியிருக்கும் இரவிலும்உடன்பிறப்பாய் இருப்பவனே திடப்பொருளில் உதித்தவனே!சுவரோ தரையோஆறோ குளமோ ஒளியினை தடுத்துநிழலாய் வாழ்பவனே!வண்ணங்கள் துறந்த கருநிற அழகனே! பூமலர்
ஒளிப் பயணத்திற்குகட்டணம் இல்லாதுஇலவசச் சுங்கச்சாவடியாய்தஞ்சமென வருபவரெவருக்கும்செய்கூலி சேதாரமில்லாமல்சேர்த்ததைத் தனதாக்காமல்அள்ளித்தந்து வள்ளலாய்அடுத்தவரின்பமே ஆனந்தம்ஆயுளுக்குமுழைக்கும் நிழலல்லநிஜம் நீ! ஆதி தனபால்
ஆகிறது…! சூரியனேகாரணம். நீயார்…? உயிர்இருக்கா…? உடல்இருக்கா…? கூடவேவருகிறாய்… நேசமா…..? பாசாமா…?? ஆனாலும்மோசம். இருட்டிலேமறைவாய்பிடித்தபடம்… நிழல்நிஜமாகிறது…!!! ஆர் சத்திய நாராயணன்
நிஜமில்லா நிலவுலகில்நிலையானதென எதுவுமில்லையேநிலையில்லா நிலையினிலும்நிலையெனவே நீங்காதேநிலைத்தே நிலைத்திருக்கும்நிஜத்தின் நிஜமாய்நிழலே நிஜமெனினும் நிலவொளியென நினைவினிலே நிறைவாய் நிழலெனவேநிறைந்துள்ளதுன் நட்புறவே *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
