நினைவுகளால் நிறைவாக வாழ்கிறேன்!என் மனவங்கியில் உனைநிறைத்து,திருப்தியாக இருக்கிறேன் உன்!அருகாமை கொடுக்கும் சந்தோஷத்தால்,மனக்கருவுலம் வழிகிறது உன்,ஸ்பரிசம் செயும் மாயத்தால்… இப்படிக்குசுஜாதா.
vaaram naalu kavi
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஐந்தாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஐந்தாவது வாரத்திற்கான (09.12.2024 – 15.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
கதிரவன் வீச்சினின்று காக்கும் தருவின்பிம்பமாய்த் தரையில்…இயற்கை எழிலைப்பெட்டிக்குள் பிடித்துப்போடும் கருவியாய்…எங்கும் எதிலும் எப்பொழுதும் எனைவிட்டுநீங்காத நிழலேநிஜமே நீயே…. நாபா.மீரா
பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
யாருமில்லா தனிமையிலும்ஒளியிருக்கும் இரவிலும்உடன்பிறப்பாய் இருப்பவனே திடப்பொருளில் உதித்தவனே!சுவரோ தரையோஆறோ குளமோ ஒளியினை தடுத்துநிழலாய் வாழ்பவனே!வண்ணங்கள் துறந்த கருநிற அழகனே! பூமலர்
