எழுத்தாளர்: தஸ்லிம்
சாரா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள்.. அவளுக்கு இரண்டு வயது இருக்கும் போதே அவளின் தந்தை இறந்து விட தாயாக தனியாக ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களையும் வளர்த்து எடுக்க பெரும்பாடுபட்டார் ஹுமைரா.. சாராவின் தந்தை செய்து வந்த காய்கறி விற்பனை தொழிலை அவர் இறப்புக்கு பின் ஹுமைரா எடுத்து நடத்தி வந்தார்.. சாராவும் அங்கு ஹூமைராவுடன் சென்று வருவாள்..
ஒரு நாள் வழக்கம் போல அவளின் அன்னையுடன் மார்கெட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கும் போது அங்கு காமில் என்பவர் அங்கு இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் சாப்பாடு பொட்டலத்தை கொடுத்தார்.. அப்போது சாராவிடமும் கொடுக்க அதை அவள் வாங்குவதற்கு முற்றிலும் மறுத்து விட்டாள்.. தாங்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் அளவில் இப்பொழுது இல்லை என்றும் அதை இல்லாதவர்கள் யாருக்காவது கொடுங்கள் என்றும் சொல்லிவிட்டாள்.. அது அவரை பெரிதும் ஈர்த்தது.. பதிமூன்று வயதே ஆன சாரவிற்குள் இவ்வளவு பக்குவமா என்று நினைத்து வியந்தவர் அவளிடம் சில கேள்விகள் கேட்டு அதில் அவள் படிக்கவில்லை என்று தெரிந்ததும் இவளிடம் பணம் கொடுத்து உதவி செய்தாலும் அவள் வாங்க மாட்டாள் என்று நினைத்தவர் அவள் அண்ணன் அங்கு தற்செயலாக வந்ததை பார்த்து அவளுக்கு தெரியாமல் அவனிடம் பணத்தை கொடுத்து அவளை படிக்க வைக்க சொல்லி கேட்டுக் கொண்டார்.. ஆனால் அவனோ இப்போ இதுதான் முக்கியமா என்று நினைத்தவன் அந்த பணத்தை பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் முற்றிலுமாக மறைத்து விட்டான்..
அதற்கு பிறகு மீண்டும் அவள் அவரை சந்தித்தது அவளுக்கு திருமணமாகி அவள் கணவருடன் ஒரு பொருட்காட்சிக்கு சென்றிருந்த போதுதான். அங்கு அவரை கண்டவள் தானாக அவர் அருகில் செல்ல.. அவளை பார்த்ததுமே அவருக்கும் அடையாளம் தெரிந்துவிட்டது..
காமில், “ஹே சாராதான நீ.. எப்படி இருக்க? இங்க என்ன பண்ணுற?” என்று இயல்பாக பேசவும்..
“ஆமா சார்.. இத்தனை வருஷம் கழிச்சும் என்னை நியாபாகம் வச்சு இருக்கீங்களே?” என்று சந்தோஷமாக கேட்டாள்..
காமில், “உன்னை மறக்க முடியுமா? சரி சொல்லு இப்போ என்ன பண்ணுற? என்ன படிச்ச?” என்று கேக்க..
“அதுதான் அன்றைக்கே சொன்னேன்ல சார் படிக்கலைன்னு” என்று அவள் சோகமாகவும்..
அதில் அதிர்ச்சி அடைந்தவர், “என்ன சொல்லுற சாரா” என்று தான் பணம் கொடுத்ததை சொல்ல வந்தவர் தயக்கத்தோடு நிறுத்திக் கொண்டார்..
பின் அவளே, “இவர் என் புருஷன் ஆசீஃப்” என்று அறிமுகப்படுத்தி வைக்க அவர்களும் பரஸ்பரம் அறிமுகம் ஆகிக்கொண்டார்கள்.. பின் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகளை அவரோடு சேர்ந்து அவளும் பார்வையிட்ட பின் அவளுக்கு பிடித்தமான சில உடைகளின் வடிவமைப்புகளை அவரிடம் குறிப்பிட அவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.. காமில், “உனக்கு இதுல இவ்வளவு ஆர்வமா?”..
சாரா, “ஆமா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இங்க ஒரு வேலை விஷயமா இவர் வந்தார்.. இதை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு கூட்டிட்டு வந்தாரு” என்றதும் அவர்களின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டார்கள்.. பின் அவர்கள் சென்று விட்டார்கள்.. ஆனால் அந்த கண்காசியில் அவள் குறிப்பிட்டு சொன்ன ஆடைகளே வெகுவாக விற்கப்பட்டு அனைவரையும் கவர்ந்திருந்தது.. அதில் அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..
அதனால் உடனே சாராவிற்கு அழைத்து, “உனக்கு என்ன தோணுதோ அது வரைஞ்சு எனக்கு அனுப்பி விடு. நான் பார்த்துட்டு சொல்லுறேன்” என்று சொல்ல..
அவளும் சரி என்று அவள் மனதில் இத்தனை நாளாக உருவாக்கி வைத்திருந்த பல வடிவமைப்புகளை வரைந்து அவற்றை அனைத்தையும் ஆசிஃபிடம் நேரடியாக கொடுத்துவிட்டு வந்தால்தான் மரியாதையாக இருக்கும் அதனால் நீங்களே செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருந்தாள்..
அவரும் சென்று கொடுக்க அந்த வடிவமைப்புகளை பார்த்து அவருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை.. சாராவின் திறமையை எண்ணி வியந்து போனார்.. அதனால் அவளுக்கு தைக்க தெரியுமா என்று கேட்டுவிட்டு., அந்த துறையில் தான் இவரும் இருப்பதால் பலத்துணி வகைகளையும் அதை தைப்பதற்கு பெரிய தையல் இயந்திரமும் வாங்கி ஆசீஃபிடம் கொடுத்து விட்டார்..
அதை பார்த்ததும் அவளும் சந்தோசமாக ஒவ்வொன்றாக எடுத்து அவள் வடிவமைத்த விஷயங்களை வைத்து அந்த உடைகளை அனைத்தையும் ஒரே வாரத்தில் தைத்தும் முடித்துவிட்டாள்.. அத்தனையையும் எடுத்துக்கொண்டு மீண்டும் இருவரும் நேரடியாக சென்றார்கள்.. அந்த ஆடைகளை பார்த்ததும் காமிலுக்கு நம்பவே முடியவில்லை.. இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டுதான் இவள் இப்படி இருக்கிறாளா என்று நினைத்தவர்., அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் அவளை ஒவ்வொரு படியாக முன்னேற்றிட உதவி செய்தார்..
ஐந்து வருட கடின உழைப்புக்கு பிறகு இன்று இந்தியாவில் அனைத்து ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறாள்.. அதனால் சாராவுக்கு அத்தனை கரகோஷத்துக்கும் நடுவில் விருது கொடுப்பதற்காக அழைக்க.. அவளோ காமிலை அழைத்து சந்தோஷமிகுதியில் அவர் கையால் விருது வாங்கினாள்..
மைக்கை பிடித்தவள், “இவர் இல்லைனா எனக்கு இந்த வாழ்க்கையே இல்ல.. எனக்கு மறுபிறவி கொடுத்த இவர் என்னைக்குமே என் தாய் தான்” என்றாள்.. குழந்தையில்லாத காமிலுக்கு சாரா இன்னொரு மகளாகிப் போனாள்..
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: