எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன்
காதல் , இது ஒரு உணர்வு , மகிழ்ச்சி யின் வெளிப்பாடு ,
குமார் பெற்றோருக்கு ஒரே மகன் . ஆசை ஆசையாக பெற்றோர் தக்க வயசில் மணம் முடித்து வைத்தனர் , இரு வீட்டார்களும் நல்ல வசதியான வர்கள்.
மணம் முடிந்து புது மண தம்பதியினர் தேனிலவு சென்று தத்தம் பணியில் ஈடு படதுவங்கினர் .
குமாரின் புது மனைவி ஹேமா குடி வந்த இரண்டு தினங்களிலேயே மாமியாரை பற்றி புரிந்து கொண்டாள் தேனிலவில் கூட மாமியார் அலை பேசியில் குமாரிடம் ” ஏம்ப்பா கண்ணு ,
சாப்பிட்டாயப்பா , உடம்பை பாத்துகோபா ” என்று அடிக்கடி பேசியது ஹேமாவிற்கு சற்று எரிச்சலை உண்டு பண்ணியது .
தன்கணவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை , அதனால் தான் தன் மாமியார் இப்படி அடிக்கடி மகனிடம் பேசி தனது அன்பை , உரிமையை நிலை நாட்டி கட்டி கொள்கிறாளா என தனக்குள்ளே கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு ஒரு வாரமாக நிம்மதியை சற்று இழந்தது போல உணர்ந்தாள்
இப்படியாக. குமார் ஹேமா தம்பதியினரின் மண வாழ்க்கை கழிந்து வந்தது , ஒரு நாள் அலுவலகம் முடிந்து குமார் வந்ததும் ஆசையாய் ஹேமா ” ஏங்க, காபி சாப்பிடுங்க ” என்று காபி கோப்பையை நீட்டும் முன் அடுத்த அறையில் இருந்து மாமியார் வேகமாக ” கண்ணு , குமாரு , இந்தப்பா, ஆஃபிஸில் இன்னிக்கு ரொம்ப வேலையா ? டீ, உனக்கு டீ ரொம்ப பிடிக்குமே , சாப்பிடு ” என்று கூறியதும் ” அத்தை, இப்பெல்லாம் உங்க பையன் காபி தான் சாப்பிடுவார் , டீயை நிப்பாட்டி விட்டார் ” என்று சொன்னதும்
மாமியார் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள். ஆசை ஆசையாய் ஒரே பிள்ளையை இப்படி வளர்த்து மணம் முடிந்த பின் பொண்டாட்டி பேச்சை கேட்டு டீ யை கூட நிப்பாட்டி விட்டானே மகன் ” என மனதிற்குள் எண்ணி லேசாக வேதனை பட ஆரம்பித்தாள் ,
இதை எல்லாம் பார்த்து கொண்டுருந்த குமாரின் அப்பா , ஒய்வு பெற்ற உளவியல் பேராசிரியர் அவர் மனைவியை கூப்பிட்டு ” சிவகாமி , இங்க வா , இது வரை நீ நம்ம மகன் மேலே வைத்திருந்த பாசம் என்ற காதல் உணர்வு , இனிமே அவன் பொண்டாட்டி வசம் போய் விட்டது . நீ அதிக உரிமை எடுத்து கொண்டு இனிமே அவனை கொஞ்சாதே . அவனிடம் கொஞ்சி , உரிமை கொண்டாட மனைவி வந்து விட்டாள். இனிமே அவ பாத்துக்குவா ,” என்று அறிவுரை கூறினாள் குமாரின் அப்பா உளவியல் பேராசிரியர் ஆதலால் , அவரது மனைவிக்கு தெரியாமல் மருமகளிடம் , : ஹேமா ,,, இங்க வா .. உன் அத்தை குமாரை பாசமாக வளர்த்து விட்டாள் , ஆதலால் தான் நீ அவனை கவனித்து கொள்வாய் என்பது கூட அறியாது அடிக்கடி குமாரை அக்கறையுடன் கேட்பதை தவறாக எடுத்து கொள்ளாதே . அவள் காட்டுவது பாசம் என்கின்ற ஒரு வித காதல் உணர்வு . நீ அவனிடம் காட்டுவதுதான் என்றைக்கும் நிரந்தரமான காதல் “
என்று கூறியதும் ஹேமா விற்கு சற்று புரிந்து கொள்ள ஆரம்பித்தது நாம்தான் அத்தையை தவறாக எண்ணி விட்டோம் என எண்ணி இனிமேல் சற்று மாறி கொள்ள வேண்டும் என முடிவெடுத்து சகஜமான நிலைக்கு வர ஆரம்பித்தாள் . .
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.