எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன்
ரகுராமன் பணியில் இருந்து ஒய்வு பெற்று விட்டார் . தனியார் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு , தற்போது வீட்டில் சும்மா இருக்க முடியாமல் மதில் மேல் பூனை போல அங்கும் இங்கும் தினசரி அலைந்து ஒரு வழியாக பொழுதை போக்கி வந்தார் . மனைவி பரிமளம் அரசு பணியில் உயர் பதவி வகிப்பவர் , கணவர் பணியில் தற்போது இல்லா விட்டாலும் அவருக்கு எவ்வித குறைகளும் தோன்றி விட கூடாதே என்றெண்ணி வீட்டில் சகல வசதிகளையும் செய்து கொடுத்து தினசரி அவரது பணிக்கு தவறாது சென்று விடுவார்
ஒய்வு பெற்று சுமார் நான்கு மாதங்கள் ஆகி விட்ட நிலையில் ரகுராமன் ஒரு நாள் நினைத்து பார்த்தார் . தினசரி சுமார் 600 . தடவையாவது எல்லா டாக்குமெண்ட் களிலும் கையெழுத்து போட்ட நாமா இப்படி சும்மா இருப்பது ? என்றெண்ணி மறுநாள் பரிமளம் பணிக்கு சென்ற பின்னர் மெல்ல பரண் மீது ஸ்டூலை போட்டு ஏறி பார்த்தார் ,
பரணில் நன்றாக துணியால் கட்டப்பட்டு பாது காப்புடன் பத்திரமாக இருந்தமிருதங்கத்தை பார்த்தது ஒரு வித இன்ப அதிர்ச்சி அவருக்குள் ஏற்பட்டது .
மெல்ல அதனை கிழே இறக்கி வைத்து தூசிகளை துடைத்து விட்டு கால் , கைகளை நன்கு அலம்பி கொண்டு பூஜை அறையில் மிருதங்கத்தை வைத்து ” எம்பெருமானே , இதுநாள் வரை வேலை வேலை என்று எனது வேலையை மட்டும் நேசித்து வந்தேன் . பணி முடிந்து வீட்டுக்கு வந்து எனது மனைவியை நேசித்தேன் . தற்போது எனக்கு நேசிப்பதற்கு எனது உற்ற தோழன் மிருதங்கத்தை தேடி தந்து விட்டாய், உனது கருணைக்கு மிக்க நன்றி ” என்று கூறி வணங்கி விட்டு உடன் மனைவி பரிமளத்தை தொலை பேசியில் அழைத்து ” பரிமளம் , ஒரு நல்ல செய்தி , நான் காலேஜ் படிக்கும் போது வாங்கிய என் மிருதங்கத்தை இன்று பரணில் இருந்து எடுத்து விட்டேன் , உன் அனுமதியுடன் நான் இனி மிருதங்க வகுப்பில் சேர போகிறேன் , ” என்று மகிழ்ச்சியுடன் சொன்னதும் ” ஆஹா , நல்ல செய்தி , நான் மாலை வீட்டுக்கு வந்த பிறகு இது பற்றி பேசிக்கொள்வோம் ” என்று சொன்னதும் மேலும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தார் ரகுராமன் .
உடனே வெளி நாட்டில் இருக்கும் தன் மகள் , மற்றும் மறு மகன் இரு வரையும் வீடியோ காலில் அழைத்து மேற்படி செய்தியை சொன்னார்.
மகள் உடனே ” அப்பா , இனிமேல் உங்க காதல் பூராவும் இனி மிருதங்கத்தின் , மேல்தான் . அப்பப்ப அம்மாவையும் மறைத்து விடாதீர்கள் , அவளையும் காதலியுங்க ” என்று சொன்னதும் அக மகிழ்ந்தார் ரகுராமன் .
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.