எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
மத்திய அரசு. தொலை பேசி அலுவலகம். நான் வேலை செய்த இடம்.
எனக்கு ஒரு நண்பர். அவர் பெயர் தேவராஜ். அவர் புதிதாக வேலைக்கு வந்த சரஸ்வதி மீது காதல் கொண்டார். இருவரும் வேறு வேறு டிபார்ட்மென்ட். தேவராஜ் உண்மையிலையே அளவு கடந்து காதலித்தார். தேவராஜ் ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்தார். மேலும் அலுவலகத்தில் ஒய்வு ஊதிய. … ப்ராவிடண்ட் ஃப்ணட்… இரண்டிலும் தனக்கு பிறகு சரஸ்வதி தான் என எழுதி கொடுத்தார்.
ஆபிசில் எல்லோருக்கும் இது தெரிய வந்துள்ளது. சரஸ்வதியும் தெரிந்து கொண்டார். ஆனால் அவர் எந்த விதமான ரெஸ்பான்ஸையும் அளிக்க வில்லை. ஆபிசு முழுக்க முழுக்க இதே பேச்சு தான். தேவராஜ் காதல் அலுவலக மேல அதிகாரிகளுக்கும் தெரிந்தது.
ஒரு முறை தேவராஜ் சரஸ்வதி இடம் பேச முயற்சி செய்தார். ஆனால் சரஸ்வதி கண்டும் காணாமலும் போய் விட்டார். தேவராஜ்… மனம் உடைந்தார் தேவராஜ் தேவதாஸ் ஆனார்.
ஆம். தினமும் மாலையில் குடிக்க ஆரம்பித்தார். அவரால் சரஸ்வதியை மறக்க முடிய வில்லை. தாறுமாறாக குடித்தார். குடியை அவரால் நிறுத்த நினைத்து கூட பார்க்க முடிய வில்லை.
அப்போது தான் நான் ஒரு புரட்சிகர அமைப்பில் முழுநேர ஊழியராக ஆபிசை விட்டு போனேன்…! எனக்கு இன்று வரை தேவராஜ் நிலை தெரியவில்லை. சரஸ்வதி… அவர் காதலை ஏற்றுக் கொண்டாரா என்று தெரிய வில்லை.
தேவராஜ் பாவம்…! காதல் ஆபத்தானது…!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.