காதல் பேசும் பிப்ரவரி: காதல் தண்டனை

by admin 2
35 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

மதுரை. ராம் ஹோமியோபதி மாணவர். அதே மதுரையில் எம். பி. பி. எஸ் படிக்கும் அலோபதி மாணவி  ரேவதி. ராம்… ரேவதி கிளாஸ் மெட்

முருகனிடம் இருந்து ரேவதி  என்ற பெயரையும், அவரது மொபைல் நம்பரும் பெற்றார். இப்போது அவசர படக் கூடாது என்று நினைத்தார். வாரா வாரம் ரேவதி மாலை நேரத்தில் ஸ்ரீ மீனாட்சி கோயிலுக்கு வருவார். இதை தெரிந்து  கொண்ட ராம் வாரம் தவறாமல் அங்கு கோவில் தெருவில் உள்ள ஒரு வாட்ச் கடையில் இருந்து சைட் அடிப்பார். ஒரு வாரமும் மிஸ் பண்ண மாட்டார். 

ரேவதிக்கு ராமின் எண்ணம் புரிந்தது. இருவருக்கும் இதுவே கடைசி வருடம். எனவே ராம் சீக்கிரம் ரேவதியிடம் தனது காதலை சொல்ல நினைத்தார். 

மொபைலில் ” ஐ லவ் யூ..! ” என்று குறுஞ்செய்தி அனுபவ வைத்தார். பதில் இல்லை. 

மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி நாடக போட்டி ரேவதியின் கல்லூரியில் தான். ஒரு அருமையான கதை. மருத்துவ துறையின் சிறப்பு. இவற்றை விளக்கி எமனுக்கு பாடை கட்டுவதுடன் நாடகம் முதல் பரிசு பெற்றது. 

கல்லூரியில் ஒரு ஒரமாக நண்பர்களுடன் ரேவதி சாப்பிட்டு கொண்டு இருந்தார். இது தான் சமயம் என்று ராம் முடிவு எடுத்து… ” ரேவதி… நான் உங்களுடன் பேச வேண்டும்…! “

” இப்போ பேசு…! ” ஒருமையில் பேசினார். கஷட்டப் பட்டு தனது காதலை சொன்னார்…! “அவருக்கு பதட்டம். ரேவதி ஆரம்பித்தார். ” நான் உன்னை காதலிக்க மாட்டேன். உனக்கு என்ன இருக்கு. ( மதுரையில் ஒரு அலோபதி மருத்துவ மனைக்கு உரிமையாளர்) 

அதுவும் நீ ஹோமியோபதி மாணவர். என்ன..? எல்லா வியாதிகளுக்கும் சக்கரை மிட்டாய் தான் தருவீர்கள்… அது ஒரு மருத்துவமா. ..? 

மேலும் நான் பணக்காரி. உன்னிடம் என்ன இருக்கிறது. ஹோமியோபதி எல்லாம் மருத்துவ முறையே இல்லை. ஐ டு நாட் லவ் யூ… நீ எனக்கு எதிரி…..! ” என்று சொல்லி கொண்டே போனார். 

ராம் திரும்பினார். மனம் உடைந்தது. காதலை தூக்கி எறிந்து பேசுவதை கூட பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தனது தொழிலையே தூக்கி எறிந்து வீசுவதும் ராமுக்கு பிடிக்க வில்லை. 

             ஆம்…..! 

          ராம்…  ரேவதிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார். 

          Emotional Punishment..!  உணர்ச்சி பூர்வ  தண்டனை. 

          வெற்றிகரமாக  பாடம் கற்பித்தார்.  காதலை தூக்கி எறியலாம். .. 

          ஆனால் காதலனை  கூடாது…!! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!