எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கிளினிக் இருந்தது. டாக்டர் பெண். பெயர் ஷர்மிளா. அவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அவர் விவாகரத்து வாங்கி விட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் தனியாக தான் வாழ்ந்து வந்தார்.
நான் அவரைப் பார்த்ததுமே என் மனசை பறிக் கொடுத்தேன். ஷர்மிளா அவ்வளவு அழகு. கேரளப் பெண். எனக்கு சக்கரை நோய் இருந்தது. நான் சிகிச்சைக்கு அவரிடம் போனேன். உண்மையில் சிகிச்சைக்காக அல்ல. அவருடன் நெருங்கி பழக விரும்பினேன்
என் பிறந்த நாள் வந்தது. நான் ஸ்வீட் பாக்கெட் உடன் அவர் வீடு சென்றேன். அவர் வாழ்த்து தெரிவித்து எனக்கு கை கொடுத்தார். எனக்கு ஒரே குஷி. சந்தோஷம்.
அவர் கை குலுக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். அவர் டீ போட்டு வந்து கொடுத்தார். அவரே போலவே டீயும் மிக நன்றாக இருந்தது. வாரா வாரம் சனிக்கிழமை சாஸ்தா கோயில் வருவார். நானும் செல்வேன். குசலம் விசாரிப்பார்.
நான் மயங்கி போனேன். அப்படி ஒரு அழகு. கல்யாணம் ஆனவர் மாதிரி தெரிய வில்லை. எனக்கு அவரை கல்யாணம் செய்து கொள்ள ஆசை. ஆண்டுகள் ஒடி விட்டன. இது வரை என் காதலை தெரியப் படுத்த வில்லை.
திடீரென அவர் கேரளாக்கு செல்வதாக சொன்னார். என்னால் இப்போதும் சொல்ல முடிய வில்லை.
ஆம்.
டாக்டர் சென்று விட்டார்.
என் காதலை நான் சொல்லவே இல்லை…?
புஸ்வானம் ஆனது…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.