காதல் பேசும் பிப்ரவரி: போ போ போ

by admin 2
27 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

ராமனுக்கு ஒரு தகவல் மொபைலில் வந்தது. தனது ஆருயிர் காதலி ரமா இறந்து விட்டார் என்று.  அதிர்ச்சி…! பேரிடி…!! நேற்று  அவர்கள் கல்லூரியில் அதிக நேரம் பேசினார்கள். இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தார்கள். நண்பனுடன் பேசினேன். ரமா பரணியில் உள்ள புத்தகங்கள் தேடி ஏணி மீது ஏறி முயற்சி செய்தார். இறங்கும் போது ஏணி தவறி கீழே விழுந்து விட்டது. ரமாவும் பொத்  என்று விழுந்தார். 

மருத்துவ மனை சென்று பார்த்தால்… தலையில் பலத்த அடி. ஏற்கனவே இறந்து விட்டார் என்று சொன்னார்கள். ராமன் அவரது வீட்டிற்கு சென்றேன். ஒரே அழுகை. ஒரே துக்கம். ராமன் ரமாவை பார்த்து கதறினான். அவனால் நம்ப முடியவில்லை. அழகி பாடையில். ஈம சடங்கு முடிந்தது. 

ராமன் வீட்டிற்கு விஸ்கி வாங்கி சென்றார். குடித்தார். துக்கம் தாங்காமல் அதிகமாக குடித்தார். ஒரு வாரமாக கல்லூரி செல்ல வில்லை. தினமும் விஸ்கி தான் அவருக்கு மருந்து. ராமன் ரமாவை நினைத்து 10 நாட்கள் அழுது தீர்த்தார். 11 வது நாள் விஸ்கி வாங்க பைசா இல்லை. படுக்கையில் புரண்டு  புரண்டு கதறி அழுதார். 

ஒரு மாதம் ஆகியது. ராமன் சுதாரித்து கொண்டார். இரவில்…. 

        போ…! போ…!! போ…!!!  என்று கத்தினார். 

                       ஆம்… 

                 போ னால்

                 போ கட்டும்

                 போடா….!!! 

                          ஆம். 

                  போ…! 

                  போ…!! 

                  போ…!!! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!