எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன்
மகாதேவன் கல்லூரியில் படிக்கும் போதே லலிதா என்பவரை காதலித்தார்.
சுமார் 3 வருடங்கள் டிகிரி முடியும் வரை காதலித்து வந்தார்.
லலிதா பெரும் பணக்காரி. மகாதேவன் நடுத்தரம் தான்.
கல்லூரி முடியும் நாள் மகாதேவன் தன் காதலை லலிதாவிடம் சொன்னார்.
லலிதா கர்வம் கொண்டவர்.
அவர் மகாதேவனை நிராகரித்தது மட்டும் அல்லாமல் அவரது ஈகோவை சுக்கு பொடி ஆக்கினார்.
“உனக்கு என்ன தகுதி இருக்கு…? ஒரு தராதரம் வேண்டாமா…? ” என அவரை தூக்கி எறிந்தார்.
மகாதேவனுக்கு அதிர்ச்சி. பேரிடி. அவரால் தாங்க முடியாத நிலை. அழுது தீர்த்தார்.
நண்பர்கள் ஆதரவு தந்தும் மகாதேவன் தன் மனச்சோர்வை விட முடியவில்லை..
மகாதேவன் காதல் திருமணம் செய்ய எண்ணி இருந்தார்.
லலிதா தன்னை வேண்டாம் என்று சொன்னது கூட அவருக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால்… ” என்ன தகுதி இருக்கு…? ஒரு தராதரம் வேண்டாமா…?? ” என்று கேட்டது தன் நெஞ்சில் கத்தியால் குத்தியது போல இருந்தது. முதல் முறையாக விஸ்கி வாங்கி குடித்தார். ஆனால் அது எதற்கும் பயன் இல்லை.
ஹாஸ்டல் ரூமில்… தண்ணீ அடிச்சி விட்டு படுத்து கொண்டார். தூக்கம் எப்படி வரும்…?
மனம் முழுக்க ரணம்…!
ஆம். அவனால் தாங்க முடியவில்லை.
வந்தது….
தீராத மனவலி…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.