எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு நடித்த வந்தேன். நான் கணக்கு மேஜர். அப்போது தான் அவளை பார்த்தேன். பெயர் மஞ்சு. எனக்கு அவளை பிடித்து இருந்தது. அவள் கல்லூரிக்கு பாவாடை தாவணியில் தான் வருவாள்.
தினமும் கூந்தலில் தாழம்பூ வைத்து வருவாள். ஒரு நாள் அவள் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாக கூறினார். எனக்கு அதிர்ச்சி. எனக்கு பேச வர வில்லை. எப்படியோ ‘ ஐ டு லவ் யு’ என்று சொல்லி விட்டேன்.
அப்போது எனக்கு மார்க்சிய அமைப்பில் சேர்ந்தேன். நான் முழுக்க முழுக்க நாத்திகன் ஆனேன். நான் நாத்திகன் என்று தெரிந்தும் மஞ்சு என்னை காதலித்தார்.
இரண்டு ஆண பழக்கம். ஒர நாள் கேட்டார் :
” வீட்டில் கல்யாணம் முடிந்த பின் ஒரே ஒரு முருகன் படம் வைக்கலாமா…? எனக் கேட்டார்.
” முடியாது.. ” என்று நான் சொன்னேன் . அவள் இரண்டு நாட்கள் கல்லூரி வரவில்லை. எனக்கு சோகம்.
3வது நாள் வந்தாள். நேரே என்னிடம் வந்து நான் அவளுக்கு கொடுத்து இருந்த என் 2 வயசு போட்டோ, நான் அளித்த பரிசுகள் அனைத்தையும் கொடுத்து விட்டு ” நம் காதல் இன்றுடன் முடிந்தது..! ” என்று சொல்லி போய் விட்டார்.
வாழ்க்கை என்பது சமரசம் இல்லை. ஆனால் வாழ்கையில் சமரசம் இல்லாமலும் இல்லை என்று எனக்கு அப்போது தோன்ற வில்லை.
ஆம்.
எனது காதல்
முருகனால்
முறிந்தது…!
பி. கு: இப்போது என் ரூமில்
3 முருகன் படங்கள் மற்றும் ஒரே ஒரு சக்தி வேல் இருக்கிறது.
கல்யாணம் அதோ கதி…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.