எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
ஊட்டி. அரசு கலைக் கல்லூரி. கல்லூரி ஆண்டு விழா.
இன்றோடு எனது கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. எங்கள் டிபார்ட்மென்ட்டில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்பனா. எனக்கு கல்பனா என்றால் உயிர். நான் சகஜமாக பேசுவேன். அவள் ஒரு அழகு தேவதை…. அவளை காதலிக்க துடங்கினேன். இருவரும் நிறையவே பேசுவோம்.
அவர் தைரியசாலி. புத்திசாலி.
ஆண்டு விழாவிற்கு கல்பனா கருப்பு புடவை மற்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தார். நெற்றியில் கருப்பு ஸ்டிக்கர் பொட்டு. என்றுமே சுடிதார் அணிந்தே வருவார். இன்று தான் சேலை.
மேடைக்கு இடது புறத்தில் பெண்கள். வலது புறத்தில் பெண்கள். விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. கல்பனா என்னை பார்த்து வர சொன்னார். நான் போனேன்.
” என்ன..? “
” சுத்தி வலைச்சு பேச எனக்கு தெரியாது… ஐ லவ் யூ…! ” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்
” நான் எது சொன்னாலும் செய்வீயா.. ? “
” ம்ம்… நிச்சயமாக…! “
” அப்போ இப்போ எனக்கு ஒரு முத்தம் தா….! “
சொல்லி முடிக்கும் முன்பே வெட்ட வெளியில் என்னை கட்டி பிடித்து கொடுத்தார்.
இச்… !
இச்… !!
முதல் முத்தம்…!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.