எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
அவள் பெயர் ஆக்சில்யம். கிறிஸ்தவ பெண். பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். வட்ட முகம். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு.
நான் கடைசி வருடம். இந்த வருடம் தான் ஆக்சில்யம் கல்லூரியில் சேர்ந்தார்.
தினமும் காலை, மதியம் மற்றும் மாலையில் ” குட் மார்னிங் மேடம்…! ” என்று சொல்வேன். இது வாடிக்கை ஆனது. எனக்கு அவரை பிடித்து இருந்தது. ஆனால் காதலிக்கும் எண்ணம் இல்லை.
ஒரு நாள் அவர் வகுப்பு மாணவியின் காதலர் என்னிடம் ஒரு குண்டை போட்டார். ஆம். ஆக்சில்யம் என்னை காதலிப்பதாக கூறினார்.
அய்யோ…! தவறு செய்து விட்டோம்..!! மனம் குறு குறுத்தது. நான் மேடம் என்று சொல்வதை நிறுத்தி விட்டேன். தெரியாமல் ஒருவர் மனதுடன் விளையாடி விட்டோம் என மனம் நொந்நது. எவ்வளவு பெரிய தப்பு…? சுமார் 6 ஆண்டுகள் கழித்து ரோட்டில் அவரை பார்த்தேன். அவர் என் அருகே வந்து நலம் விசாரித்தார்.
திடிரென அழ ஆரம்பித்து விட்டார். மனச்சுமை…! வேலை கிடைக்க வில்லை என்று சொல்லி அழுதார். எனக்கு தர்மசங்கடம். அவரை அழுவதை நிறுத்த சொன்னேன்.
” முயலுங்கள்… நிச்சயமாக சீக்கிரம் வேலை கிடைத்து விடும்… கவலை படாதீங்க…! ” என்று ஆறுதல் சொன்னேன். பின்னர் புறப்பட்டு சென்றேன்.
ஆம்.
நான் செய்த தவறு..!
அவரை மேடம் என்று அழைத்தது தான்…! !
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.