எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
ஆமாம் தும்மல் தான். அது எப்போது, எப்படி, யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆம். காதலும் அப்படி தான். அது எப்போது, எப்படி, யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. இதை சொல்வதற்கு காரணம் ஒன்று உள்ளது.
கல்லூரி இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. தலைப்பு ‘ திருமணத்தில் சிறந்தது காதல் திருமணமே… இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமே என்று நடந்தது.
நான் காதல் திருமணமே என்று ஆணித்தரமாக விளக்கி பேசினேன். என் உயிர் நண்பன் பாஸ்கர் நிச்சயக்கபட்ட திருமனமே என்று ஆக்ரோஷமாக பேசினார்.
பாஸ்கருக்கு காதலில் நம்பிக்கை இல்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு பாஸ்கரை சென்னை ஐஐடி யில் பார்த்தேன். அவர் ஒரு ஆராய்ச்சி மாணவர்.
அப்போது ஒரு விஷயம். நான் தற்சமயம் இந்து என்ற பெண்ணை காதலிக்கிறேன் என்றார்.
போட்டோவையும் காட்டினார். எனக்கு ஷாக்…! அதிர்ச்சி..!!
” ஏண்டா.. உனக்கு தான் காதலே பிடிக்காதே… நீ எப்படி…? “
” ஆமாம் ஆனால் இந்துவை பார்த்த உடனே எனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்து விட்டது.
ஆராய்ச்சி முடிந்ததும் திருமணம்..! “
” மனமார்ந்த வாழ்த்துக்கள்.! ” என்றேன்.
நான் சந்தோஷமாக கிளம்பி விட்டேன்.
ஆம்…!
ஹச்… ஹச்…!!
தும்மல் போல யாருக்கு எப்போது எப்படி, வரும் என யாருக்கும் தெரியாது.
” ஹச்…! ஹச்..!! “
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.