எழுத்தாளர்: நா. பத்மாவதி
காலம் போன கடைசி கால கழுத்தறுப்பாக அண்ணனுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து நானும் என் தங்கையும் பிறந்தோம்.
அப்பா ஓர் சூது வாது தெரியாத மிக மிக சாதுவான குணம். அவரது அண்ணாவை தவிரஉலகமே தெரியாதவர்.
தினமும் என்னை ஒரு கையில் பிடித்து தங்கையை தூக்கி வெளியில் அழைத்து செல்வார். அதிர்ந்து யாரையும் மரியாதையின்றி பேச மாட்டார்.அன்பாய் அருகே அழைத்து கொஞ்சியதில்லை. ஆனாலும் அப்பாவை ரொம்ப பிடிக்கும்.
நல்ல மிக வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்துசொத்து அனைத்தையும் நம்பியவரே ஏமாற்றிய காரணத்தால் மன நோயாளிஆனது பெருங்கொடுமை.
எல்லாம் நல்லபடியாக வந்த வேலை முடிந்தது என அப்பா எங்கள் திருமணம் முடிந்த மூன்றாவது வருடம் காலமானார்.அவருடைய இறுதிநாள்களின் கவலை, எனக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதே.
எனக்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு ஒரு பெண்ணும், சில வருடங்களில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது என அவரிடம் சொல்ல ஆசை. “அப்பா உனக்கு ஒரு பேத்தி, பேரன் இருக்கா பாருப்பா” என
அவரிடம் சொல்ல முடியாத நிஜம்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!