சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: மகளின் ஆசை

by admin 1
81 views

எழுத்தாளர்: தஸ்லிம்

எல்லாருக்கும் தன்னோட அப்பா எப்படி ஒரு முன்மாதிரியோ ஹீரோவோ எனக்கும் அப்படியே.. என் அப்பாவை பார்த்து வியக்காத நாள் இல்ல.. பதினாலு வயசுலயே வேலைக்கு சேர்ந்து இரவும் பகலுமா கடுமையாக உழைத்து எத்தனையோ அடிகள் துரோகங்களை கடந்து இன்று ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு இடத்தில இருக்கார்.. அவர் எடுக்கும் முடிவுகள் என்றும் தவறா போனது இல்ல.. நான் பார்த்த வரையில் அவர் கணிப்புகள் என்றும் பொய்யாக போனது இல்லை.. அவர்கிட்ட இருக்கும் உதவும் குணத்துல இருந்து அவரோட ஆளுமை நிர்வாக திறன்னு எல்லாமே எல்லாத்தையுமே வியந்து  பார்த்திருக்கிறேன் பார்க்கிறேன் நான்.  ஒன்றை தவிர.. அது அவரின் கோபம். சின்னதா ஒரு தவறு அவர் கண் முன்னால நடந்துட்டா போதும். கோபம் எங்க தான் அதுவரையிலும் மறைந்து இருக்குமோ  கொஞ்சமும் நிதானிக்காம அப்படியே பட பட பட்டாசா வெடிச்சு தள்ளிடுவார். அது யாரா இருந்தாலும் சரி எந்த இடத்தில இருந்தாலும் சரி.. சரமாரியா கத்திடுவார்.. அது மனைவி மக்கள் தாய் தந்தைன்னு யாரா இருந்தாலும் சரி அந்த நேரத்துல அவரை எதிர்த்து பேச முடியாத அளவுக்கு சத்தம் அதிகமா இருக்கும். இந்த கோபத்தை முழுசா விடனும்னு சொல்லல கொஞ்சமா குறைச்சுக்கலாம். எங்களுக்காக எத்தனையோ செய்த இன்னுமே நாங்க கேக்காமலே செய்துக் கொண்டு இருக்குறவர் கிட்ட இதை நேரடியா சொல்ல முடியாம அவ்வப்போது நான் சொல்ல நினைத்து சொல்லாம மறைக்கிற ஒரு விஷயம் இது தான்.. அவர் செய்ற நல்ல விஷயங்கள் கூட இந்த கோபத்தினால எல்லாமே அடிப்பட்டு போயிடுதோ அப்படிங்கிற சந்தேகம் எனக்கு எப்போவும் உண்டு.. இந்த குணத்தை மட்டும் மாத்திக்கிட்டார்னா அவரை அடிச்சுக்க ஆளே இல்லை.. கடைசியா ஒன்னு, பொறுமையாக இருங்கள்.. பொறுமையாளருடன் இறைவன் இருக்கிறான்” என்று நீங்க உங்க காருக்கு பின்னால எழுதி வச்சு இருக்கிறதை நீங்களும் கொஞ்சம் கடைப்பிடிக்கலாமேப்பா….

முற்றும்.

சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!