பஞ்சபூதங்களின் ஏப்ரல்: பேரழகி

by admin 2
105 views

எழுதியவர்:  சிவகாமசுந்தரி நாகமணி 

தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு

படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தான் மோகன்.கை நிறையச் சம்பளத்துடன் வேலையும் கிடைத்துச் சேரச் சொல்லியிருக்கிறார்கள்.

“அத்தான்…” , குயில் குரல் கேட்டுத் திரும்பினான்.அவன் மாமன் மகள் சுகன்யா.அவள் தீத்தழும்பு முகம் பார்த்துத் திரும்பிக் கொண்டான் .

வெகு நாட்கள் கழித்து அம்மா கையால் சாப்பிட்டு உறங்கினான்.

ஹாலில் பேச்சுக் குரல் கேட்டு விழித்தான்.

அத்தை- சுகன்யாவின் அம்மா தான் பேசிக் கொண்டிருந்தாள்.

 “என்ன அண்ணி செய்யறது?  சின்ன வயசுல விளையாட்டா நெருப்புக் குச்சியைத் தூக்கி மோகன், சுகன்யா மேல போட்டு அவ முகம், கையெல்லாம் இப்படி ஆச்சு.கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு.

பிளாஸ்டிக் சர்ஜரிக்குச் சேர்த்து வைத்த பணத்தை, மோகன் படிப்புக்குக் குடுக்கச் சொல்லி,சுகன்யாவே சொன்னதாலே அதுவும் செலவாயிடுச்சு.இன்னும் கொஞ்சம் காசு சேர்த்து வைத்துத்தான் சர்ஜரி செய்யணும்.இந்த விஷயம்லாம் மோகனுக்குத் தெரியவே கூடாதுன்னு உங்க தம்பி _சுகன்யா அப்பா சொல்லியிருக்காரு”,. என்றாள். 

இப்போது மோகன் விழிகளில் சுகன்யா பேரழகி!

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!