அந்நிய தேசத்தின்
அரைகுறை துரியவனே,
வெளிர் மஞ்சள் கண்களை
பெற்றவனே,
உனை அடையாளம் கண்டுகொள்ளவே
மணிக்கணக்கானது;
அரைகுறையாய் வந்தாலும்
அனைவர் இதயதில்
இடம் பிடித்து இல்லத்தில்
நுளைந்துவிட்டாய்,
துறித உணவானாலும்
சாதுர்யமாய் சாதித்து விட்டாய்
விருந்தோம்பலில் நீயும் ஒரு அங்கமாய்….!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
