இல்லத்தில் உள்ளே
வெல்லமெனை இனிக்கும்
சுத்தம் செய்தால் போதுமா? இல்லத்தின் வெளியேயும்
சுத்தம் தேவை ….
குப்பைகளும் பிரித்து
மக்கும் குப்பை
மக்கா குப்பைகள் என
கொடுத்தாலே பணி
எளிதாகுமே………
உள்ளத்தில் குப்பை
மெல்ல மெல்ல விழுந்து
சேர்ந்தால் ஆரோக்கியம்
பாதிக்குமே…..
எங்கும் தேவை சுத்தமென
பொங்கும் உள்ளதோடு கடைபிடிப்போம்…..
சட்டென எதுவும்
சாத்தியம் இல்லை
முயன்றால் வெற்றி உறுதி
உஷா முத்துராமன்