காகிதத்தில் கவியுரைத்தே
காவியமாய் ஆக்கிடினும்
காதலுடன் காணாவிடில்
காவியமும் வெறுங்காகிதமே
காலமெலாம் கவியெழுதினேன்
காகித குப்பையாய்
காற்றோடு கலந்ததுவே
கவியின் காதலனாய்
சந்திரனும் சந்தித்ததாலே
சிந்தையெழும் சொல்லெலாமும்
எழுத்தினனாம் என்தோழனவன்
வலிய அன்பினாலே
வரிகளை ரசித்ததபின்னே
குப்பையுள் குப்பையானவை
குப்பைக்குள் மாணிக்கமாய்
ஒளிரத் தொடங்கின!
ஒவ்வொரு எழுத்துமே!!
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜேஜெயபிரபா