காலடி காதலாடி மெய்யுற!
காதல் மருத்துவனாய்
நானடி..
உன் வருத்தங்கள் களைந்து
வாழ்வேனடி..
பிடித்த பாத பந்தம் மணவறை சொர்க்கமாய்
தொடர்வேனடி..
ஊடலும் கூடலும் கள்ளச்சண்டையிட்டுக் கொண்டே சிரிக்குதடி
உனை எனை பார்த்தப்படி..
சித்திரபெண்ணே விழிமூடி நீ லயிக்க விரலிசைத்த என் கரங்கள்
மோகன கீதம் இசைக்குதடி..
நம் நிலையில் நாம் வாழ
கதவடைத்து கொள்வோமா
யாரும் பார்க்காதபடி..!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
