படம் பார்த்து கவி: காலைக்குளியல்

by admin 1
59 views

காலைக்குளியல் கடும்பசி
நோயும் போம்”…..ஆசாரக்கோவை.
உண்மைதான்…. காலையில்
குளித்தல் ஒரு தவமே!அதுவும்
காலைக் கதிரவனின்…
பொற்கிரணங்கள் மலை வழிப்
புறப்பட்டு , அடவி வழிப்
பயணித்து,
மரவீட்டில் வைக்கப்பட்ட
படிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.
அடடா!….அப்படியே ஒரு
மூலிகைக்குளியல்………
நினைத்தாலே நெஞ்சம்
இனிக்கிறதே!
மேனி நரம்புகள் அனைத்தும்
சுகராகம் இசைக்கிறதே!
உடலெங்கும் இனம்புரியா
பரவசமின்னல் ஓடுகிறதே!
உள்ளமதும் குளிர்ந்து
மன அழுத்தம் நீங்கி,
புத்துணர்ச்சி பாய்கிறதே!
உச்சி முதல் பாதம் வரை ஓடும்
செங்குறுதி சீர்படுதே!
கற்பனைக்கே இத்துணை
சுகம் என்றால்……….
இங்ஙனம் ஒரு வாய்ப்பு கிடைத்தால்……..அது
இறைவன் அளிக்கும் வரமே!
மு.லதா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!