என் அழகுத் தங்கமே
நீ பத்தரை மாற்றுத் தங்கம்
உனக்கு எதற்கு தங்கம்
உன் மீது மோகம் கொண்ட
தங்கமே தானாக தங்கியதோ
நீ வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துக்கு வண்ணமாக
உனக்கு எதற்கு வண்ணப் பூச்சு
உன் கையோடு கைகோர்த்து
உன் கைகளுக்கு முத்தமிடும்
என் ஆசை இப்பிறவியில்
கனவாகப் போக அடுத்த
பிறவியில் நிறைவேறுமா?
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)