தாழிடப் பட்ட
இரும்பிலான உன் இதயக் கதவுகளை
எந்த சாவி கொண்டு திறப்பது??
கல் நெஞ்சுக் காரியே
எறும்பு ஊற ஊற
பாறை கூட தேய்ந்து போகிறது
கரும்பே-அரும்பை கூட
மேயாத மானே
தேயாத நிலவு
இயற்கையில் சாத்தியமில்லை
இரக்கம் கொள்ளடி
உன்னை நினைத்து கொண்டிருக்கும்
அந்த பாழாய் போன இதயம்
நிமிடத்துக்கு எழுபத்திரண்டு முறை
துடித்து விட்டு போகட்டும்!!!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)