தலைப்பு : தெய்வத்தின் குரல்
உன் பிஞ்சு பாதங்களில் முத்தமிட
ஏங்கும் பிள்ளையில்லா என் இதயத்தை கேள்?
நீ
எனக்கு வரமா என்று?
உன்னை தூக்கிக் குப்பையில் எறியும் மூர்க்கர்களிடம் கேள்?
நீ அவர்களுக்கு பாரமா என்று?
தகுதியில்லாதவர்களுக்கு உன்னை அளித்தானே
இறைவனிடம் கேள்?
உன் நெஞ்சு கல்லா என்று?
உன் முகம் பார்க்க துடித்து பத்துத் திங்கள் உன்னைச் சுமக்கும் அன்னையர் யாவருமே தெய்வங்கள் தாம்.
நெறிப்பிழன்ற
சில இழிப்பிறவிகளின் செயலால் இறைவா உனக்கும் வந்ததே சோதனை …
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
