நான் கைவிலங்கு பேசுகிறேன்!
காவல்துறை என் தாய்வீடு!
காசில்லா ஏழைத்திருடனிடம்
காலமெல்லாம் கட்டுண்டு
கிடக்க வற்புறுத்தப் படுவேன்!
கட்டுக்கட்டாக அடிப்பவன்
கிட்டாதோர்க்குக் கொடுத்து
மகிழ்ந்தால் அவன் நிழலைக்
கூட மிதிக்க விரும்பமாட்டேன்.
ஆனால்……….
என் ஆசையை மதிப்போர் யார்?
நாட்டைச் சுரண்டி வாழும்,
நாணம் கெட்ட மனிதக்கூட்டம்
நாடிச் செல்லவே நாளெல்லாம் ஆசை!
ஆனால்……..
என் ஆசையை மதிப்போர் யார்?
வயிற்றுப் பசிக்குத் திருடும்
வாயில்லா ஜீவன்களுக்கு,
பிக்பாஸ் நண்பனாவேன்.
வன்புணர்வு செய்யும்
மனித. மிருகங்களுக்கும்,
கிஞ்சித்தும் கருணையின்றி
வஞ்சித்துக் கொல்லும்
மாபாவிகளுக்கும்
வாழ்நாள் முழுவதும் நெருங்கிய
நடபுக் கொள்ள ஆசை!
ஆனால்………..
என் ஆசையை மதிப்போர் யார்?
பல பாவிகளின் கரங்களைத்
தீண்டும் வாய்ப்புக் கிட்டாவிடினும்,
ஒரு அப்பாவியின் கரத்தைக்கூட
கறை படிய விடமாட்டேன்..என்று
சூளுறைக்க ஆசை!
ஆனால்………..
என் ஆசையை மதிப்போர் யார்?
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
