நிரலாக்க மொழி
நீல வானில் கருமேகங்கள்
ஒன்று திரண்டு படையெடுக்க…
செங்கதிரவன் கண் கூசும்
மின்னொளியை வீசிட…
மலை கூடாரமெங்கும்
பனிமூட்டம் குவியலாக படர்ந்திருக்க…
நீல நீரோடையும்
அதன் மையத்தில்
பாட்டில் குடுவையும்
இருபுறமும் கரும்பச்சை
புற்களும் மரங்களும் நிற்க…
குடுவையில் தெரியும் நிழலுருவும்
இது சாத்தியம் தானா..?
எனும் ஐயத்தை விதைக்கிறது தானே..
ம்ம்ம்… ஆம்..,
இயற்கையை வெல்ல
செயற்கையால் முடியாது தான்..
செயற்கை பொருள் நோக்கு நிரலாக்க மொழியில்
குழந்தைகள் விரும்பும்
கேலிச்சித்திர காணொளிக்காக
கணிணியில் வடிவமைத்தேன்…..!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)