பச்சை நிற சிறுசிறு மலர்கள்,
பார்வைக்கு பூக்கோசின் தன்மை!
மூதாதையரோ முட்டைக்கோசு.
சிறுமலர்கள் தாங்கி நிற்கும் தண்டோ
எலும்பு வடிவில்! எனவேதான்
எலும்புக்கு வலு சேர்க்கிறாயோ?
கண்டம் தாவும் குளிர்காலப்
பைங்கிளி நீ!…… எனினும்,
பட்டணங்ளில் மட்டும்,,
எல்லாமும் எக்காலமும்….!
பன்னீர் கலந்த உன் குழம்பு,
உமிழ்நீர் சுரக்க வைக்கும்!
பிஸ்தா முந்திரி கொண்டு
பிரத்யேகமாய்த் தயாரிக்கப்படும்
உன் சூப்பு… அடடா
தேவாமிருதமன்றோ!?
நாசிக்கு நல்ல மணமூட்டி,
நாவிற்கு நல்ல சுவையூட்டி,
இதயத்துக்கோ நல்ல வலுவூட்டி.
புற்றுநோய்க்கோ பரம எதிரி!
மொத்தத்தில் உனை உண்டால்,
உச்சி முதல் பாதம் வரை,
இல்லையே மாசு.
பச்சை நிறப் பூக்கோசு…..உனைச்
சமைத்துண்பதால்,
விரயம் இல்லை கைக்காசு.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
