- பாத காவலன்
உன் ஆயுள் ரேகையாய் உன்
உயிரில் கலந்தவன் நான்தானே,!
என் கைகளில் உன் பாதங்கள்
தவழ பாக்கியம் செய்தவன் நான்தானே,!
பஞ்சு போன்ற இருக்கை இருந்தும்
உன் பாதங்களை பாதுகாக்கும்
காவலன் நான்தானே,!
உன் விரல் பிடித்து நடந்ததில்
நிமிடங்கள் மறைந்து
மணித்துளிகள் கறைந்ததில்
உன் பாத மலர்கள்
வாடிய தருணத்தில் வருடி விட வந்தவன் நான்தானே,!
நீயின்றி நானில்லை
உன் நினைவின்றி என்
பொழுதில்லை
என் உச்சி முதல் பாதம் வரை
ஸ்பரிசத்தில் கலந்தவள்
நீ தானே,!!!
ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
