படம் பார்த்து கவி: பூக்களிட்ட

by admin 1
102 views

பூக்களிட்ட கண்ணாடி குடுவை உருகுதலில்

நிறம் படர்ந்த தீயொன்று எரிகிறது

சுடர் பரவிய மெல்லிய சூடு

பூக்களின் மென்மையை‌ கருக்கிக் கொண்டிருக்க

நீர் கசியும் திரவமாய் உயிர் உறைகிறது

காற்றின் சுழலுக்குள் ஒளி திசைகள்

ஒவ்வொன்றாக அணைந்து மின்னும் கடைசி தருவாயில்

அடி தடித்து தேங்கி நிற்கும்

மெழுகின் திட உடலென சிதைந்திருக்கிறார்கள்

எங்கோ யாரோ புணர்ந்து வீசிய பல மலர்கள்…..

🌺 நிழலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!