அணிய மறந்ததால்
அழிந்து போன
பல சோகக்கதைகளை
நீங்கள்
கேட்காமலோ,
காணாமலோ கூட
இருந்திருக்கலாம்
ஓட்டு போடாதவன் வாழ்வு கூட
ஐந்து ஆண்டு காலம் தான்
இருண்ட காலம்
ஒரு வேளை
நீங்கள் அணியாமல்
செல்ல நேரிட்டால்
அசம்பாவிதங்கள்
ஒரு வேளை நேரிட்டால்
அநியாயமாக
உங்கள் பொன்னான வாழ்வு கூட
பறி போகலாம்
லி.நௌஷாத் கான்