பிறந்த நொடியில் அன்னையின்
அன்பு விலங்கிள் மாட்டி கொண்டேன்,
நினைவு தெறிந்த நாளிலிருந்து
தந்தையின் சொல் எனும்
விலங்கிள் மாட்டி கொண்டேன்,
உடன் பிறந்த உயிர்களின்
பாச விலங்கிள் மாட்டி கொண்டேன்,
உயிர் நட்பின் வளைய
விலங்கிள் மாட்டி கொண்டேன்,
உயிருக்கு உயிரான வாழ்க்கை துணையின் காதல் வளையின்
மீளா விலங்கிள் மாட்டி கொண்டேன்,
நான் பெற்ற செல்வத்தின்
சிந்தி சிதறா அன்பின் சிறையில் மாட்டி கொண்டேன்,
புதிரான வாழ்விற்கு நான் ஒன்றும்
புதிதல்ல,
வாழ்க்கை சிறையில் மாட்டி கொண்டேனா,
காலம் எனை சிறையெடுத்து
விலங்கு மாட்டியதா,
இன்று வரை மீளவில்லை,
என்று வரை விலங்கின்
வாசம் என்று புரியவில்லை,
புதிரான புதுமை வாழ்வில் ….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
