பழமொழி போட்டி கதை: கல்வியா? இசையா?

by Nirmal
116 views

எழுதியவர்: ஆர் .சத்திய நாராயணன்

பழமொழி: முயற்சி திருவினையாக்கும்

            கல்வியா ? இசையா ??
நம் நாயகன் கண்ணன் .வயது 16.  அப்பா இறந்து போய் எட்டு வருடங்கள் ஓடி விட்டது .அம்மா கல்யாணி ஒரு உயர் நிலை பள்ளியில் ஆசரியர்.வீடு வாடகை வீடு தான் .கண்ணன் ஒரு கீ போர்டு பைத்தியம்.தனக்கு எட்டு வயது இருக்கும் போதே அப்பா வாங்கி கொடுத்தது .அப்பா வங்கி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார்.அப்பா இறந்ததும் குடும்ப பொறுப்பு முழுவதும் கல்யாணி தான் .கல்யாணிக்கு கண்ணன் போக்கு சுத்தமாக பிடிக்க வில்லை .சதா தனி அறையில் கீ போர்டு வாசித்து கொண்டே இருந்தான் .படிப்பில் அவ்வளவு அக்கறை காட்ட வில்லை .அவன் படிப்பில் சராசரி மாணவனாகவே இருந்தான் .அவன் படிப்பில் அக்கறை காட்டது இருப்பது கல்யாணிக்கு அச்சத்தை தந்தது .இன்றும் சனிக்கிழமை .காலையிலே கீ போர்ட் வாசிக்க ஆரம்பித்தான் .
“ கண்ணா …! சதா கீ போர்டு கீ போர்டு என்று இருக்கியே.?இது நமக்கு சோறு போடுமா ..?படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும் .வாழ்க்கை நன்றாக இருக்கும் .நீ படிப்பில் கவனம் செலுத்து …!”
“ அம்மா ..அப்படி இல்லை அம்மா …இசையும் சோறு போடும் .விருப்பம் ,பயற்சி மற்றும் விடாமுயற்சி இருந்தால் போதும் .வெற்றி நிச்சயம் .இளையராஜா எந்த கல்லூரியில் படித்து இசையில் சாதித்தார் ? சச்சின் எந்த கல்லூரியில் படித்து உலக சிறந்த கிரிகெட் வீரராக வந்தார் …?”
“ கண்ணா …! அதற்கு எல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும் .இப்போது எத்தனையோ இசை அமைபளர்கள்  வந்து விட்டார்கள் .இதில் நீ எப்படி ஜெயிக்க முடியும் …? நன்கு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் .நான் இன்னும் சில வருடங்கள் தான் வேலை செய்ய முடியும்” .ஆம் கல்யாணி சில வருடங்களில் ஓய்வு வந்து விடும் .அதனால் கண்ணன் எதிர்காலம் பற்றி மிகவும் கவலை அடைந்தார் .தினமும் கீ போர்டு பிரச்சனை வந்தது .கண்ணன் விடுவதாக இல்லை பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தான் .பிறகு பிளஸ் 2 வில் சேர்ந்தான் .அவன் பிளஸ் 2 படிக்கும் போது தினமும் கீ போர்டு பிரச்சனை  வெடிக்கும் .தினமும் பெரிய விவாதமே நடக்கும் .பிளஸ் 2 வில் கண்ணன் அதிக கவனம் செலுத்த வில்லை. கல்யாணி மிகவும் கோபமாக நடந்து கொண்டார். .ஆனால் கண்ணன் கண்டு கொள்ள வில்லை .கீ போர்டில் நல்ல பயற்சி பெற்று நன்றாக வாசிக்க ஆரம்பித்தான் .+2 வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான் .ஆரம்பித்தது சண்டை . +2 விற்கு பிறகு என்ன செய்வது என்று .தான் பி.ஏ மியூசிக் எடுக்க விரும்பினான். அம்மாவிற்கு உடன்பாடு இல்லை .கல்யாணி  மிகவும் வருத்த பட்டார். ஆனால் கண்ணன் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பி.ஏ. மியூசிக் சீட் வாங்கி விட்டான்
அம்மாவுக்கு சரியான கோபம் .ஆம் .எந்த அம்மாவிற்கும் தன் மகனின் எதிர்காலம் குறித்து கவலை இருக்காதா..? கல்யாணி கண்ணன் நினைத்து மிகவும் வேதனை அடைந்தார் .
இவ்வாறு இருக்கையில் ஒரு சனி கிழமை வீட்டை சுத்தம் செய்தார். அப்போது அவரது கணவன் தனுக்கு எழுதிய  ஒரு பழைய கடிதம் கிடைத்தது . அதாவது 1௦ வருடங்களுக்கு முன் அவர் கணவர் தனக்கு எழுதிய கடிதம் .
       “ ….கல்யாணி …! நீ கண்ணன் பற்றி பயம் அடைய தேவை இல்லை .அவனுக்கு எது பிடித்து இருக்கிறதோ அதையே செய்யட்டும் .நான் என் வேலைகளை முடிக்க ஒரு வருடம் ஆகலாம்.அவன் இசையில் ஆர்வமாக இருந்ததால் தான் அவனுக்கு கீ போர்டு வாங்கி கொடுத்தேன் .அவனின் இந்த ஆர்வத்திற்கு தடை போடதே .அவன் சுதந்திரமாக இருக்கட்டும் .அவன் வாழ்கையை அவனே தீர்மானிக்க செய்யட்டும் .ஏன் ? அவன் ஒரு சிறந்த இசையமைப்பளராக வர கூடாது ..? அவன் முயற்சிகளுக்கு குறுக்கே இருக்காதே ..! நீ கண்ணன் மீது உயிரை வைத்து இருக்கிறாய் என்று எனக்கு நன்றாக தெரியும் .கவலை படாதே .அவன் நன்கு வருவான் .நீ அவனுக்கு குறுக்கே நிற்காதே …அவனை உற்சாக படுத்து .படி ..படி …படி …என்று சொல்லாதே ..! வீட்டில் வேலை ..பின் பள்ளியில் வேலை …என்று இருக்கும் நீ கண்ணனை நினைத்து உடம்பை கெடுத்து கொள்ளாதே …! நீ கண்ணன் பற்றி அச்சம் கொள்ளாதே .அவனை அவனாக இருக்க விடு .ஒரு நாள் நிச்சயம் அவன் சாதிப்பான் என்று நம்பு …பயம் வேண்டாம் …….”
என்று ஒரு பெரிய கடிதம் எழுதி இருந்தார் .கடிதத்தை படித்து விட்டு பெருமூச்சு விட்டார்.கணவனின் கடிதம் அவரது நெஞ்சை தொட்டது. இனி கண்ணனிடம் போராடுவது இல்லை என்று முடிவு எடுத்தார். தன் கணவர் சொன்ன மாதிரி பொறுப்பை கண்ணனிடமே விட்டு விட்டார். +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்தான் .பி.எ மியூசிக் எடுத்தான் . நாளுக்கு நாள் அவன் கீ போர்ட் ஆர்வம் அதிகரித்து கொண்டே போனது. சதா வீட்டில் கீ போர்ட் இசை தான் கேட்டு கொண்டு இருந்தது .இப்போது கல்யாணி  பய படவில்லை .கண்ணனை  வெறுக்க வில்லை.கண்ணனுக்கு அனுசரணையாக இருந்தார் .கண்ணனுக்கு அம்மாவின் புதிய மாற்றம் ஏன் என்று புரியவில்லை .கண்ணனை படி ,படி என்று சொல்வதை நிறுத்தி விட்டார் கடவுள் மேல் பாரத்தை போட்டு கண்ணனை உற்சாக படுத்தினார்.இந்த முடிவு ..அம்மாவின் மாற்றம் கண்ணனுக்கு மிக பெரிய உற்சாகம் மற்றும் தெம்பை அளித்தது .
ஒரு நாள் தன் கீ போர்டு எடுத்து கொண்டு இசையமைப்பாளர் அனிருத் வீடு சென்றார்.அனிருத் பிஸியாக இருந்தார். அவரை காண சுமார் ஒரு மணி நேரம் காத்து இருந்தார். பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .அனிருத் இடன் தான் கீ போர்டு உதவியாளராக வாய்ப்பு கேட்டார் .சில பாடல்களை வாசிக்க சொல்லி அவர் கேட்டார். கண்ணன் அருமையாக வாசித்து காட்டினார். தெள்ள தெளிவாக அவரது இசை இருந்தது .சிறிது  பிசிறு கூட இல்லை.பின்பு அவர்  தன்னிடம் கீ போர்டு உதவியாளராக சேர முடியமா என்று கேட்டார். “ நிச்சயமாக சார் ..” என்று உடனே கண்ணன் தன் விருப்பம் தெரிவித்தார் .” சம்பளம் எவ்வளவு எதிர்பார்கிறீர்கள் ..?” என்று கேட்டார் .” உங்கள் இஷ்டம் “ என்று கண்ணன் தெரிவித்தார்.” சரி ..உங்களுக்கு மாதம் தோறும் 15,௦௦௦ தருகிறேன் போதுமா ..?” என கேட்க கண்ணன் மகிழ்ந்து ஒப்பு கொண்டார் .” ஓகே சார்.    பிறகு அனிருத் வரும் திங்கள் கிழமை முதல் ஆபிசுக்கு வர சொன்னார்.  மனம் துள்ளி குதித்தது .தனக்கு பிடித்த வேலை கிடைத்து விட்டது .
கல்யாணிக்கும் சந்தோசம்.ஆனால் மனகுறைவும் இருந்தது .. ஆனால் கண்ணன் சந்தோசம் தன் கணவனின் சந்தோசம் காரணமாக அவரும் இதை ஏற்று கொண்டார். ஆம். கணவனின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தார் .தன்னையே மாற்றி கொண்டார்.
வயது 27 வயது. வேலையில் சேர்ந்து பல படங்களுக்கு அருமையாக கீ போர்டு இசை வாசித்தார். இந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் கண்ணனை தன் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ..? என கேட்டார்.கண்ணன் அனிருத் இடம் இதை சொன்னார். அதற்கு அவர் வாய்ப்பு கிடைப்பதை ரொம்ப கஷ்டம் .உடனே ஒப்பு கொள்ளுங்கள் என்று கண்ணனை உற்சாக  படுத்தினார் “  முதல் படம் .படத்தின் பெயரும் ‘முதல் படம்’.கண்ணனுக்கு பொருத்தமாக அமைந்தது .ரொம்ப கஷ்டப்பட்டு பாடல்களுக்கு இசை அமைத்தார். வித்யாசமான பாடல்கள் .கேட்பதற்கு இனிமையாக இருந்தது. மிருதங்கம் மற்றும் வயலின் அதிகம் பயன் படுத்தினார். சரணம் மற்றும் பல்லவிக்கு மத்தியில் புதுமாதிரி இசை அமைத்தார்.  எல்லா பாட்டுகளும் செம ஹிட் . அது மட்டும் இல்லாமல் “புதிய படம்” சினிமாவில் ஒரு பாடல் ஆசிரியராகவும் பணி ஆற்றினார்.
                  கண்ணே …!
                  கண்ணே ….!!
                  நான்
                  பாட்டு படிச்சேன் …
                  உன்னை நினைத்து ..
                  பாட்டு படிச்சேன் …
                  உன் கண்ணை பார்த்து
                  பாட்டு படிச்சேன் …!
                  கண்ணே …! கண்ணே …!!
இது தான் பல்லவி .இந்த பாட்டை கண்ணன் தான் எழுதி இருந்தார் .A.R.ரகுமானுக்கு ‘ சின்ன சின்ன ஆசை ‘ போல் கண்ணனுக்கு இந்த “ கண்ணே …! கண்ணே…!!” பாடல் அமைந்தது .படம் வெளிவந்து படு ஹிட் ஆனது . எல்லோரும் கண்ணனை கவனித்தார்கள் .படம் வெற்றி பெற்றதும் கண்ணன் சந்தித்தது அனிருத் தான் . அவரும் கண்ணனை பாராட்டி வாழ்த்தினார். கண்ணன் வெற்றி போதையில் முழுக வில்லை . அடக்கத்துடன் இருந்தார்.இந்த வருடத்திற்கான தேசிய விருதகள் அறிவிக்க பட்டன . சிறந்த இசை அமைப்பாளர் விருது கண்ணனுக்கு கிடைத்தது . அது மட்டும் இல்லை . சிறந்த பாடல் ஆசிரியர் விருது “ கண்ணே…! கண்ணே …!”  பாடலுக்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது . கண்ணனுக்கு  மகிழ்ச்சி .
                 ரெட்டை விருது
                 சிறந்த இசை அமைப்பாளர்…!.
                 சிறந்த பாடல் ஆசரியர் …!!
அம்மாவிற்கு இன்பம் தாங்க முடியவில்லை . தான் கண்ணனை படி ..படி ..என்று சொன்னது எவ்வளவு பெரிய தப்பு என்பதை இப்போது உணர்ந்தார்.கல்யாணி கண்ணனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்.
“ அம்மா பழசை மறந்து விடுங்கள் .எனக்கு இப்போது தான் புது வாழ்வு வந்து உள்ளது. நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்..!”.என் சொன்னான் .
டெல்லி . விருது வழங்கும் விழா . கண்ணன் .தன் தாயை பேச சொன்னார்கள் . நான் இந்த இரண்டு விருதுகள் வாங்க காரணமே என் அம்மா தான் காரணம் . அடுத்ததாக இசை அமைப்பாளர் அனிருத் .
கல்யாணி மேடையிலே கண்ணன் நெற்றிக்கு 2 முத்தம் கொடுத்தார்கள் .
கரவொலி விண்ணை பிளந்தது .
                   கல்யாணிக்கு ஒரே சந்தோசம் …!
                   கண்களில் ஆனந்த கண்ணீர் …!!

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!