எழுதியவர்: ஜே ஜெயபிரபா
பழமொழி: வாயிலே உறவு மனதிலே பகை
அர்த்தம்:
வாய் வார்த்தையில் காரியம் சாதிக்க நண்பனாக நடந்து கொண்டு நடித்துக் கொண்டு மனம் முழுவதும் தனக்கு சாதகம் இல்லாதே போனால் வஞ்சகம் வைத்தே பழிவாங்குவது
பிரபல வீட்டு உபயோகப் பொருள் வியாபார நிறுவனத்தின் ஹெச் ஆர் அலுவலகத்தின் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது கைக்கடிகாரத்தை பார்ப்பதும் கைகுட்டையால் கண்ணீரைத் துடைப்பதுமாக அமர்ந்திருந்த பிரபாவை அவசரமாக உள் நுழைந்த ஹச் ஆர் மேனேஜர் பார்க்காமல் இல்லை
என்னவாக இருக்கும் என்று மனதில் எண்ணஓட்டம்
இருப்பினும் உடனே அழைத்துப் பேச இயலவில்லை காலை பணிகளை முடிக்க வேண்டியதாய் இருந்தது
வினிஷா வருகைப்பதிவு நோட்டை கொண்டு வந்து ஹெச் ஆர் மேசையில் வைத்தாள்
வினிஷா பிரபா மேடம் வந்து இருக்காங்க என்னன்னு உனக்கு தெரியுமா என்று வருகைப்பதிவு நோட்டை பார்வையிட்டவாறு வினிஷாவிடம் கேட்டார்
வினிஷா பட்டும் படாமல் என்னனு நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்றாள்
ஹெச் ஆர் கொஞ்சம் சகஜமாக பேசுற டைப் அதனால எல்லாரும் அவர்கிட்ட கொஞ்சம் பயம் இல்லாம தான் பேசிக்குவாங்க
வினிஷாக்கு பிரபா ஏன் வந்து இருக்காங்கன்னு தெரியும் இருந்தாலும் அது,
தான் சொல்றதை விட பிரபாவே அவளோட பிரச்சனைகளை சொல்லி சரி செய்து கொள்வது நல்லதுனு நினைக்கிறா
ஹெச் ஆர் அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டார் மனதில் பிரபா பற்றிய எண்ண ஓட்டங்களுடன்
பிரபா நல்ல பொண்ணாச்சே, இதுவரைக்கும் அவளுடைய வேலையும்சரி அவளுடைய பழக்கத்தையும் சரி எந்த குறையும் நான் கண்டுபிடிச்சது இல்லையே
அவளும் யாரைப் பற்றியும் எந்த குறையும் சொன்னது இல்லையே என்ன நடந்திருக்கும்
ஒருவேளை தொடர்ந்து இங்கே பணிபுரிந்திருந்தால் எந்த பிரச்சனையும் வராது இருந்திருக்குமோ என்று எண்ணியவர் நினைவில் மனதில் அந்த நாள் மனக்கண் முன் வந்தது
ஆஷா பிரபாவை விட ஆறு மாத ஜீனியர்
பிரபாதான் பில்லிங் கேஸ் பண்றதுக்கான ட்ரெய்னிங் கொடுத்தாங்க
திடீர்னு ஒரு நாள் ஆஷா அக்கவுண்ட்ஸ் ஆபீஸ்க்கு மேலே வந்து எனக்கு அவங்க கூட வேலை பார்க்க பிடிக்கல என்ன வேற எங்கயாவது மாத்திடுங்க என்று பிடிவாதமாக கூறினாள்
நான் கவனித்தவரை அவர்கள் இருவருக்கும் இதுவரை எந்தவிதமான பிரச்சனையும் வந்ததில்லை நன்றாக தான் பணிபுரிந்தனர் ஏன் இப்படி சொன்னாள் என்பதும் தெரியவில்லை ஆனால் ஆஷாவுக்கு அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கிட்ட நல்ல பழக்கம் இருந்தது
இருப்பினும் அலுவலகத்தில் பலரும் பிரபாவோட வேலையை புகழ்ந்து பேசுவதும் ஆஷா இனிதான் கத்துக்கணும்னு சொல்றதும் ஆஷாவுக்குள் இருந்த ஈகோவை உசுப்பி விட்டுடுச்சுனு நினைக்கிறேன்
அதன் பின் மேனேஜர் ஆஷாவை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டார்
இரண்டொரு நாளில் பிரபாவிடம் நம்ம பிரான்ச் ஆபிஸ்ல ஆள் தேவைப்படுகிறார்கள் நீங்க அங்க போக முடியுமா என்று மேனேஜர் கேட்டார்
பிரபா மறுத்து பேசாமல் ஓகே என்றார் அதன் பின் இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது பிரபா மட்டும்தான் பில்லிங் அக்கௌன்ட் கேஷியர் எல்லாமே பார்த்துக்கிட்டாங்க ஏதாவது சந்தேகம் எனில் மேனேஜர் கிட்ட கால் பண்ணி கேட்டுக்குவாங்க இதுவரை எந்த பிரச்சனையும் இல்ல தான்
இப்படியாக சிந்தனையோடு காலை பணிகள் முடிந்தது தற்செயலாக அக்கவுண்ட்ஸ் ஆபீசுக்குள் நுழைகையில் அங்கே பிராஞ்ச் ஆபிசின் இன்சார்ஜும் அக்கவுண்ட்ஸ் மேனேஜரும் பேசியது காதில் லேசாக விழுந்தது எம் டி கிட்ட அப்பாலஜி எழுதி கொடுக்க சொல்லணும் அப்பதான் சரியா வருமென
ஏன் என புரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கையில் வந்து அமர்ந்தவர் வினிஷாவிடம் கைகாட்டி பிரபாவை உள்ளே வரச்சொன்னார்
வலுக்கட்டாயமாக கண்ணீரை துடைத்து கொண்ட பிரபா ஹச் ஆர் முன்னால் எதுவும் நடக்காதது போல் வந்து அமர்ந்து கொண்டாள்
சொல்லுங்க பிரபா என்ன ஆச்சு
ஹெச் ஆர் கேட்டதும் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் மீண்டுமாக கண்களில் கரை புரண்டது துடைத்துக் கொண்டே தொடங்கினாள்
நியூ இயர் லீவு இன்சார்ஜ் மேம் கிட்ட கேட்டேன் அவங்க எனக்கு கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க அப்புறம் அவங்களோட சிஸ்டர் எம்டி மேம் கிட்ட பேசினேன் நைட் மாஸ் போயிட்டு மார்னிங் ஒர்க் பாக்க முடியாது சோ என்னால வர முடியாதுன்னு சொன்னேன் சரி ஓகே எடுத்துக்கன்னு சொன்னாங்க ஆனா அதுக்கு அப்புறம் குரூப்ல மெசேஜ் போட்டு இருக்காங்க நான் எம்டி சார் கிட்ட அப்பாலாஜி எழுதி கொடுத்துட்டு தான் ஆபீஸ்க்கு வரணும்னு சொல்லி
ஓ சாரி நானும் மெசேஜ் எதுவும் பாக்கல ரெண்டு நாளா உடம்பு சரியில்ல லீவு எடுத்து இருந்தேன் எங்க என்ன மெசேஜ் என்று பார்ப்போம் என மேசையிலிருந்த தனது கைபேசி எடுத்து மெசேஜ் பார்த்தபடியே
ஏன் உங்களுக்கும் இன்சார்ஜ்க்கும் ஏதாவது பிரச்சனையா? உங்க மேல ஏதாவது கோபமா அவங்களுக்கு என்றார் ஹெச் ஆர்
எதுக்கு இப்படி போட்டு இருக்காங்க நீங்க அடிக்கடி லீவு எடுக்கிறவங்களும் கிடையாதே என்றதும் வினிஷா வந்து இடையில் பேசினாள்
எப்பவுமே அவங்களுக்கு எல்லாம் இவங்க மேல கோவம் தான் இவங்க தான் சொன்னா கேக்குறது இல்ல ஆஷா தான் இன்சார்ஜ் மேம் கிட்ட இல்லாததெல்லாம் இவங்கள பத்தி சொல்லி வெச்சிருக்கிறா
அவங்க பிரபா அக்காகிட்ட பேசும்போது நல்ல பிள்ளையா பேசிக்கிறாங்க
அக்கவுண்ட்ஸ்ல வந்து இவங்கள பத்தி இல்லாதது எல்லாம் சொல்றாங்க இவங்களும் வெளுத்ததெல்லாம் பாலுன்னு சொல்லிட்டு எல்லாரும் நல்லவங்க தான் நீ அவங்கள தப்பா நினைக்காதே என்று சொல்லி எனக்கே அட்வைஸ் பண்றாங்க
அதும் இல்லாம அக்கவுண்ட்ஸ் மேனேஜர் அக்காவிடம் மிஸ்பிகேவ் எல்லாம் பண்ணி இருக்காரு அது கூட சரி தெரியாம பண்ணிட்டாங்க அதெல்லாம் பெருசு படுத்த வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க
இப்போது பிரபாவை பார்த்தார் ஹெச் ஆர்
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் எனக்கு மெசேஜ் பண்ணுவாங்க
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்கிட்ட பேச ஆசையா இருக்கு நீ தான் என்கிட்ட சரியா பேச மாட்டேங்கற கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும் உனக்கும் எல்லாம் நல்லதா நடக்கும் இல்ல அப்படி இப்படின்னு அப்புறமா மெசேஜ் எல்லாம் டெலிட் பண்ணிட்டியா எனக்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பு இப்படி எல்லாம் கூட போடுவாங்க
இடையில ஒரு தடவை பிரான்ச் ஆபீசுக்கு வந்து இருக்கும்போது என்கிட்ட பேசினாங்க என்னோட பேமிலி பத்தி என்னோட ஏஜ் பத்தி எல்லாம் கேட்டாங்க நான் 45 அப்படின்னு சொன்னதும் அவங்களோட ஃபேஸ் மாறிடுச்சு ஐயோ நீங்க என்னோட பெரியவங்களா நான் ஒரு 30 35 இருக்கும்னு நினைச்சேன் சாரி அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் அவங்களோட செயல்பாடுகள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்துட்டிருக்கு
லாஸ்ட் மந்த் கூட ஒரு பையன ட்ரெய்னிங் அனுப்பியிருந்தாங்க அந்த பையன் ஆப் அன் ஹவர் என்கிட்ட பேசி பழகல அவன் சொல்றான் அக்கா உங்களை மாற்றுவதற்காக தான் என்னை ட்ரைனிங் அனுப்பி இருக்காங்க ஆனா எனக்கு சிரிப்பா வருது நீங்க சரியா வேலை பாக்கலையாம் எல்லாமே தப்பு தப்பா பில் போடுறீங்களாம் பைல் எல்லாம் தப்பாதான் பண்றீங்களாம் ஆனா தப்பா பண்றவங்க கிட்டயே டிரெய்னிங் அனுப்பி இருக்காங்களே அப்ப நானும் தப்பாதானே கத்துப்பேன்
இப்படி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஒரு ஜிஎஸ்டி பில் வந்தது சிஸ்டம் எரர் அது சரி பண்றதுக்காக அக்கவுண்ட்ஸ் மேனேஜருக்கும் இன்சார்ஜ் மேம்க்கும் கால் பண்ணினேன் பலமுறை கால் பண்ணி யாருமே எனக்கு ரிப்ளை பண்ணல ஆனா வெங்கடேஷ் வந்து பக்கத்துல தான் நின்னா அவன் போன் பண்றான் அப்ப அட்டென்ட் பண்ணி பேசுறாங்க இதை பார்த்ததும் அந்த பையன் சொல்றான் நீங்களா இருக்க போய் இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வேலை பாக்கறீங்க நான் எல்லாம் இங்க வரமாட்டேன் நீங்களும் பார்த்து நடந்துக்குங்க அப்படின்னு அதும் இல்லாம இங்க வேலையே இல்லைன்னு சொன்னாங்க இங்க வந்து பார்த்தா தான் தெரியுது அக்கவுண்ட்ஸ் பில்லிங் கேஷ் எல்லாமே நீங்க ஒரு ஆள் தனியா தான் பாத்துக்குறிங்க உங்களுக்கு யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணல நீங்க மட்டுமே தனியா தான் எல்லாமே பார்த்துக்குறீங்கனு என்று பிரபா கூறி முடித்ததும் வினிஷா தொடங்கினாள்
அவங்களுக்கு பிரபாக்காவ மாத்திக்கிட்டு ஆஷாவ அங்க வைக்கணும் அதுக்காக தான் எல்லாரும் இப்படி பண்றாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்றாள் வினிஷா
அவங்க யாரையும் வச்சுக்கட்டும் இனிமே நான் வரமாட்டேன் என்றாள் பிரபா இதை கேட்டதும் ஹச் ஆர் அவசரப்படாதீங்க பிரபா நீங்க அப்பாலஜி எல்லாம் எழுதிக் கொடுக்க வேண்டாம் இதெல்லாம் பத்தி நான் பேசுறேன் எம்டி சார் கிட்ட என்றார்
வேண்டாம் சார் நீங்க இது பத்தி யார்கிட்டயும் பேச வேண்டாம் யார் யார் எப்படினு உங்ககிட்ட சொல்லிக்கிட்டு போகத்தான் வந்தேன் ஏன்னா என்கிட்ட உண்மையா பழகுனவங்கள்ள நீங்களும் ஒருத்தவங்க அப்பா ஸ்தானத்தில் எனக்கு நல்லது நினைச்சவங்க அதனால உங்க கிட்ட போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போகலாம் என்று தான் வந்தேன் நீங்க பேசுறதால யாரோட மனசுல இருக்கிற வஞ்சகமும் குரோதமும் மாறப்போவதில்லை அது அதுக்கு ஆண்டவனுக்கு பதில் சொல்லட்டும் என்றவள்
வேற எதையும் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் அங்கிருந்து விடைபெற்று கிளம்பினாள்
இதை எதையும் எதிர்பாராதவர்கள் அக்கவுண்ட்ஸ் அலுவலகத்தில் பிரபா மீது என்னவெல்லாம் பழி போடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர் குரோதத்துடன்…
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.