எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
பழமொழி: வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
அர்த்தம்:
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு.ஒருவர் எதை விதைக்கிறாரோ அதனையே அறுவடை செய்வர்
மந்திரி எஸ்.ராஜ சுந்தரம்
எப்பொழுதும் வெண்மையான சட்டை (சட்டைப் பாக்கெட்டில் கருப்பு எழுத்துக்களால் எம்பிராய்ட் செய்யப்பட்டடு எஸ்.ஆர்.எஸ் என்று மின்னிடும்) ,கரை வேஷ்டி,கட்சி கரை வெண்துண்டு போட்டு, பந்தாவாக இருப்பார்.யாரையும் மதிக்கமாட்டார்.
சிறுவயதிலேயே ரவுடித்தனம்,கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு சிறுக,சிறுக பணம் சேர்த்தார்.அவர் போடும் எலும்பு துண்டுகளுக்காக அவரை சுற்றி ஒரு பெரிய அடியாள் கூட்டமே இருக்கும்.
கட்சியின் பல பதவிகளை வகித்ததினால், பணம் அபரிமிதமாக சேர்ந்தது.கூடவே அகந்தை,அகங்காரம், ஆணவம்,எல்லோரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
அந்தக் காலத்தில் ‘நடு முகம்’ என்னும் தினசரி பத்திரிக்கையை
ராமன் என்பவர் நடத்தி வந்தார்.ராமன் அந்த காலத்துப் சுதந்திர போராட்ட வீரர்.அதாலால் தன் ‘நடு முகம்’ பத்திரிக்கையில் நேர்மையான விஷயங்களையும்,விமர்சனங்களையும்தான், பிரசுசிப்பார்.
அந்த பத்திரிக்கையில் முருகேசன் என்னும் சிறுவன் ஆபீஸ் பாய்யாக வேலைக்கு சேர்ந்தான்.எதிலும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தான்.அதனால் ராமன் அவர்கள் முருகேசனுக்கு அச்சுக்கோர்க்கும் வேலையைக் கற்றுக் கொடுத்தார்.இயற்கையிலேயே அறிவுமிக்கவனான முருகேசன் விரைவில் அந்த தொழிலைக் விரைவில் கற்றுக் கொண்டான்.
ராமன் ஐயா அவர்களுக்கு பிள்ளையில்லாத காரணத்தால்,முருகேசனைக் தன் மகனை போலவே நடத்தி வந்தார். முருகேசனுக்கு இருபத்தி ஐந்து வயது நடக்கும்போது, நல்ல இடத்தில் பெண் பார்த்துக் சரஸ்வதியைக் ஒரு சுபமுகூர்த்த நாளில் திருமணம் செய்து வைத்தார்.
மேலும் ஒரு நாள் ராமன் அவர்கள் “முருகேசா இந்த பத்திரிக்கையை உன் பெயரிலேயே எழுதி வைக்கிறேன்,நல்லபடியாக நடத்தி வா”என்று சொல்லி,வெகு விரைவிலேயே தன் இறுதி மூச்சை விட்டார்.
இதே காலக்கட்டத்தில் ராஜன் என்பவன் ரவுடிக்கூட்டத்தின் தலைவன்.இவனுக்கு ஒரு மகன்.அதே சமயத்தில் முருகேசனுக்கும் ஒரு மகன் பிறந்தான்.
ரவுடி ராஜன் தன் ஒரே மகன் சுரேஷைக் செல்லமாக வளர்த்து வந்தான்.
முருகேசனும், பாலமுருகனை தன் சக்திக்கேற்ப வளர்த்து வந்தார்.
சுரேஷ்க்கு சுமார் பத்து வயது இருக்கும் போது,அவன் ஒரு சாலை விபத்தில் சிக்கி நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் இருந்தான்.
“அந்த ரவுடிப்பய ராஜனின் மகன்தானே இவன்”என்று ஏளனமாக பேசி, ஒருவர்கூட உதவ வரவில்லை.
எத்தேசையாக அந்த பக்கம் வந்த முருகேசன், உடனே ஆட்டோ பிடித்து, ஒரு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்ததால், உயிர் பிழைத்தான் சுரேஷ்.
காலம் உருண்டோடியது. ராஜன் தன் பெயரைக் எஸ்.ராஜ சுந்தரமாக மாற்றிக் கொண்டு ஒரு கட்சியில் மந்திரிப் பதவியையும் வகித்தார்.பின்பு அவரை
எஸ்.ஆர்.எஸ் என்று எல்லோரும் அழைத்தார்கள்.
தன்னுடைய தினசரி பத்திரிக்கை நடு முகத்தை வாரப்பத்திரிக்கையாக மாற்றினார் முருகேசன்.
பல ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் ஊழல்களைப் பற்றி எழுதினார்.பத்திரிக்கையின் சர்க்குலேசன் எகிறியது.
அதனால் முருகேசன் பல கட்சித் தலைவர்களை பகைத்துக் கொண்டார்.
இந்நிலையில் முருகேசன் மகன்,பாலமுருகனுக்கு இருதய மாற்று சிகிச்சை இந்த வருடத்திற்குள் நடைபெற வேண்டும் என்று கண்டிப்பாக டாக்டர்கள் சொல்லி விட்டனர்.
அப்போது நமது மந்திரி எஸ்.ஆர்.எஸ்நடத்திய ஊழல் பற்றி,தன்னுடைய ‘நடு முகத்தில்’ கடுமையாக விமர்சித்தார்.
இதனால் கடும்கோபடைந்த மந்திரி,வஞ்சம் தீர்ப்பதற்கு காத்திருந்தார்.
முருகேசன் எதிர்கட்சித் தலைவரைப் பற்றியும் மிக மோசமாக எழுதி வந்த பொழுது, அந்த நேரத்தில் வஞ்சகமாக, முருகேசனைக் தன் வீட்டிற்கு சாமதானம் பேச அழைத்தார் மந்திரி.
“வாங்க ராஐன் உட்காருங்க” என்று அழைத்தார்.
“வணக்கம் சார்” என்றார் முருகேசன்.
ஒரு கட்டத்தில்,வார்த்தைகள் தடித்து,ஒருமையில் முருகேசைனைக் திட்டிக்கொண்டே, பக்கத்திலிருந்த இரும்புப் துண்டை எடுத்து அவர் பின்மண்டையில் ஓங்கி அடித்தார்.அங்கேயே சுருண்டு விழுந்த முருகேசன் இறந்து போனார்.
மறுநாள் பாழடைந்த கிணற்றிலிருந்து முருகேசனின் உடல் கிடைத்தது.
ஒரு வாரம் ஓரே களேபேரம்.பல கட்சித்தலைவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருந்தனர்.
முருகேசனின் மனைவி சரஸ்வதி, பத்திரிக்கை நிறுவனத்தைக் விற்ற நிலையில்,பி காம் படித்ததினால், ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
மேலும் தன் மகனுக்காக மாற்று இருதயம் கிடைக்க பெரு முயற்சி எடுத்து வந்தார்.
எஸ் .ஆர்.எஸ் மகன் சந்தோஷ் பைக் டீலரிடம் புதிய மாடல் வண்டியை டிரையல் பார்க்க கெல்மெட் போடாமல் கிளம்பிய முப்பதாவது நொடியில்,பைக் ஸ்கிட் ஆகி ,சந்தோஷ் தூக்கி வீசப்பட்டு, விளக்கு கம்பத்தில் மோதி, பின்தலையில் பலத்த அடி வாங்கி கீழே விழுந்தான்.
ஐ.சி.யு வில் இருந்த சந்தோஷ்க்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சரின் அறிவுரையின் பேரில், சந்தோஷ் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.
சந்தோஷின் இதயம் இப்பொழுது,முருகேசனின் மகன் பாலமுருகன் உடலில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.