எழுதியவர்: உஷாமுத்துராமன்
என் வீட்டில் 50 வயது மதிப்புடைய ஒரு பெண்மணி வேலை செய்கிறார் அவர் பின் வீட்டிலும் வேலை செய்கிறார் அந்த வீட்டில் கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் இருக்கிறார்கள். மனைவியுடன் அவருக்கு மனஸ்தாபம் ஏற்பட மனைவி கோபித்துக் கொண்டு இவரை விட்டுவிட்டு மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார்..
எழுவது வயது மதிக்கத்தக்க அவர் வீட்டில் என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வேலை செய்தாள் அவள் ஒருமுறை பாத்ரூம் கழுவிக் ளெகொண்டு இருக்கும்பொழுது இந்த 70 வயது முதியவர் பனிப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அவள் பயந்து கொண்டு வெளியே வந்துவிட்டாள். அதற்குப் பிறகு அங்கு வேலைக்கு செல்லவில்லை.
அந்த வீட்டிற்கு வேலை போகாததை பார்த்த நான் “ஏன் அங்கு வேலை செய்யவில்லை?” என்று கேட்டதற்கு அவள் அந்த பெரியவர் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று பயத்துடன் சொன்னார் ஆனால் அந்த பெரியவர் வெளியில் எல்லோரிடமும் என் வீட்டில் வேலை செய்தவள் எங்கள் வீட்டில் இருந்து 8000 பணத்தை திருடி விட்டார் என்று தன்னை பாதுகாத்துக் கொள்ள பொய் சொன்னார்.
எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நீ அந்த பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று என்னை சொல்லிவிட்டு அவள் திருடிய பணத்தை நான் தான் கொடுக்க வேண்டும் என்று சப்தமிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவர் கொடுத்த பாலியல் தொல்லையை வெளியே தெரியாமல் இருக்க அவர் என் வீட்டு பணி பெண்ணை திருடி பட்டம் கட்டி வெளியே அனுப்பிதை இப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கும்
இருந்தாலும் நான் என் பணிப்பெண் சொன்னதை நம்பி அவளை என் வீட்டில் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன்.
உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் எங்கள் வீட்டு பணி பெண்ணின் மீது அபாண்டமாக பொய் சொன்னது அந்த பெரியவரை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும் ஆனால் பிறகு அவர் அமைதியாகிவிட்டார் உண்மையிலேயே என் வீட்டில் வேலை செய்பவள் அவர் வீட்டில் இருந்து பணத்தை திருடி இருந்தால் அவர் இப்படி அமைதியாக இருப்பாரா? என்று நான் நினைத்துக் கொண்டேன்.
இப்போதும் நான் என் வீட்டில் பணி செய்பவரிடம் நீ அந்த வீட்டில் வேலைக்கு செல்லக்கூடாது என்று சொல்ல அவள் இப்போது அமைதியாக எங்கள் வீட்டிற்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறாள்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.