பாலியல் பேசும் மார்ச்: பிஞ்சு

by admin 2
23 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

எனக்கு வயது 9. பள்ளியில் படித்து வந்தேன். எங்கள் வீட்டுக்கு முன் பிரம்மசாரிகள் பலர் ஒரு வாடகை வீட்டில் இருந்தார்கள். வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பவர்கள். 

அதில் ஒருவன் பெயர் கண்ணன் ஜீ. அரசு வேலை பார்த்து வந்தார். நான் சாயங்காலம் அந்த வீட்டுக்கு செல்வேன். எல்லோரும் சீட்டு கட்டில் ரெமி ஆடிக் கொண்டு இருப்பார்கள். 

சில நாள் கண்ணன் தனியாக இருக்கும் போது என்னை கூப்பிட்டு வரவழைப்பார். 

பிறகு… வாய் கூசுகிறது. ஒரு நாற்காலியில் அமர்ந்து என்னை திருப்பி கட்டி பிடித்து சுய இன்பம் காண்பான். எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.  என் பேண்ட் டில் வெள்ளையாக ஒரு திரவம். 

எனக்கு அதை தொடவே அசிங்கமாக இருந்தது. 

ஆம். காமூகன் விந்தை என் பின்னால் வெளியேற்றி விடுவான். நான் யாரிடமும் சொல்ல வில்லை. ஆனால் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் விலை உயர்ந்த பேனாவை எடுத்துக் கொண்டு போய் விட்டேன். நான் அங்கு செல்வதை தவிர்த்து விட்டேன். 

இது தான் முதல் பாலியல் வன்கொடுமை. 

பிறகு…. ஒரு நாள் ஒரு கோவிலில் விசேஷம் நடந்தது. 

எனக்கு வயது 9 தான். அந்த கோவிலில் இரண்டு சாமியார்கள் பக்க பக்கமாக உட்கார்ந்து இருந்தார்கள். அதில் ஒரு சாமியா(ன்) ர் என்னை அருகே கூப்பிட்டு உட்காரச் சொன்னார். 

கோவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். பிறகு என் கையை எடுத்து அவனின் காவி வேட்டி க்குள் உள்ளே வைத்தான். 

ஆம். 

அவனது ஆண் குறி…! என்னிடம் ” தடவு ” என்று சொன்னான். அவன் குறி பெரிதாகி சுய இன்பம் பெற என்னை பயன் படுத்தினான். 

எனக்கு ஷாக்…! சாமியாரா இப்படி செய்வது…?  எனக்கு ஆச்சரியம். கோபம்.  எல்லாம் வந்தது. இந்த மாதிரி பாலியல் வன்கொடுமை இப்போது எங்கும் நடைபெறுகிறது. 

சிறுமியை கூட விட்டு வைப்பது இல்லை. காமூகன்கள் இதில் கூட்டு பாலியல் வன்கொடுமை வேறு.  இப்பேற்பட்ட காமூகன்களுக்கு தண்டனை பெரிதாக இருக்க வேண்டும். யாருக்கும் இந்த செயல் செய்ய பயம் வரவேண்டும். 

ஆம்.  காமூகன்களுக்கு அவனது ஆண் குறியில் அமிலத்தை ஊற்ற வேண்டும்.  அதுவும் நடு ரோட்டில். அவன் துடிதுடிப்பது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.  சுமார் 3 நிமிடங்கள் காமூகன் அமிலத்தால் துடிதுடிப்பது மிகவும் கொடுமை தான். 3 நிமிடங்கள் கழித்து அவனை அவனது ஆண் குறியில் துப்பாக்கி கொண்டு சுட்டு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் தான் இது மாதிரி நடந்து கொள்கிறார்கள். 

இது மட்டுமே இல்லை. இது மாதிரி பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சிறுமி பத்து பாத்திரம் தேய்க்க வருவார். வயது 10 அல்லது 11 தான் இருக்கும். வீட்டில் மனைவி இல்லாத சமயம் பார்த்து அவன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான்.  அந்த சிறுமி என் வீட்டிற்கு வந்து என்னிடம் சொல்லி அழுதார். எனக்கு செம  கோபம். எனக்கு வேறு வழி இல்லை. அந்த சிறுமியை அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தேன். 

அவன் கைது செய்யப்பட்டு அவன் மீது குற்றப்பத்திரிகை போடப்பட்டது. ஆனால் அவன் ஆளும் கட்சி பிரமுகர்கள் மூலம் ஜாமீன் வாங்கி வெளியே வந்து விட்டான்.

இதை   விட மோசமான விஷயம். என் அம்மா வருடாவருடம் சபரிமலை செல்வது வழக்கம். எப்போதும் போல ஒரு வருடம் போனார். தரிசனம் முடிந்தது. பின் ரயிலில் பயணம். அப்போது ஒரு கிழவன் என் அம்மாவின் கை, கால்களை தடவி வந்து இருக்கிறான். 

என் அம்மா டிக்கெட் ஆபிசரிடம் சொன்னார். ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் இருந்தார். பிறகு அம்மா அவரை கண்காணித்து வந்தார். முதல் வரிசையில் கீழ் பெர்த்தில் ஒரு சிறுமி படுத்து உறங்கி கொண்டு வந்தார். அந்த தடியன் அந்த சிறுமியின் கால்களை தடவி வருவதை என் அம்மா பார்த்து விட்டார்.

ஆம். 

என்று பெண் அச்சம் இல்லாமல் இரவில் நடை போடும் போது தான் நாம் சுதந்திர நாடு என்று சொல்ல வேண்டும். இது எனது கருத்து அல்ல. மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன விஷயம். 

இங்கே ஒன்று சொல்லி ஆக வேண்டும். பாக்ஸிங் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பூஷன் மீது புகார் அளித்தும் இது வரை காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த எம். பி. யோ புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜாலியாக இருந்தார். 

என்ன மண்ணங்கட்டி இது,.? 

அரசியல் செல்வாக்கு முழு பூசணியை சோற்றில் மூடி மறைத்து விடுகிறது.                

பெண் போற்ற பட வேண்டியவள். அவளுக்கு ஆணுக்கு உள்ள எல்லா சுதந்திரமும் உண்டு. அவளை பலியாடாக ஆக்குவது பெரிய அளவிலான தப்பு. 

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றான் மீசைக்கார பாரதி. 

               பெண் வாழ்க…! 

   பாலியல் வன்கொடுமை

                ஒழிக…!!

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!