அவமானத்தின் காயங்கள்
ஒவ்வொன்றும்
பூனையின் பாதங்களில்
புலியின் நகங்களை
தீட்டுகின்றன
ஆனால்,
அனைத்துத் திசையிலும்
புலியின் கர்ஜனை
அடங்காப் பெருவெள்ளம்
சிலசமயம்
புலியும் பூனையின்
அமைதியில் உறங்கும்
பூனைக்கும் சிலசமயம்
புலியின் சீற்றம் தேவை
காலத்தின் மாற்றங்கள்
கற்பிக்கும் பாடங்கள்
மாறிட மறுத்தால்
உலகத்தின் காலடிக்குள்
கால்பந்தாய் நாமே!
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: புலிப்பூனை
previous post
