எழுதியவர்: குட்டிபாலா
மெய் எழுத்து வார்த்தை: பொய்/ய்
நெல்லை மாநகரம்.
அல்வாவுக்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை.
நெல்லையப்பன் அல்வா வாங்கியதோடு கடை அடைக்கப்பட்டது. பின்னால் நின்றிருந்த அனைவரும் ஏமாற்றத்துடன் நகர்ந்தனர். வடநாட்டிலிருந்து வந்திருந்த இரு சிறுவர்கள் பெற்றோரிடம் அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தனர்.
இரயில் நிலையத்தில் அல்வா பொட்டலங்கள் நிறைந்த பையுடன் அவனைப் பார்த்ததும் அவ்விருவரும் பெற்றோரிடம் மீண்டும் கத்தியதிலிருந்து மொழி புரியாவிட்டாலும் அவர்கள் நம்மூர் அல்வாவுக்காகவே ஏங்குகிறார்கள் என்பது தெரிந்தது.
சென்னை எக்மோர் ஸ்டேஷனில் இறங்கி நின்ற அவனிடம் அவ்விரு சிறுவர்களும் “சுக்ரியா பையா. அல்வா கா பைசா” என்று இந்தியில் சொல்லிவிட்டு 500 ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு பெற்றோர்களிடம் ஓடினர்.
தலை குனிந்து நின்றவனிடம் முதலாளி “பில்லில் 20 என்றும் பொட்டலங்கள் 18 என்றிருப்பதைப் பார்த்ததும் நீ திருடியிருக்கிறாய் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அந்த குழந்தைகளிடம் இரண்டைக் கொடுதகதுவிட்டு பொய் சொல்லியிருக்கிறாய்.உண்மையில் இது பொய்யல்ல. உன் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது” என்று தட்டிக்கொடுத்தார்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.