மெய் எழுத்து போட்டி கதை: உறவுக்கு மரியாதை 

by admin 2
53 views

எழுதியவர்: நா.பா.மீரா 

மெய் எழுத்து வார்த்தை: புத்திசாலி/த் 

கஜா நாம  மீட் பண்ணி ரொம்ப நாளாச்சே , எங்க வீட்டுக்கு வாயேண்டா ….நண்பன் ராஜா.

ஏ ..மூதேவி ,கண்ணு முன்னால வராதேன்னு எத்தனைவாட்டி சொல்லிட்டேன் …உன் தரித்திரம்தான் என்னையும் ஆட்டிப் படைக்குது ..என் பிரெண்டப் பார்க்கப் போறேன், திரும்பி வர்றப்போ இங்க இருந்தேன்னா  நடக்கறதே வேற…

கல்லூரித் தோழி காமினியிடம் போனில் புலம்பினாள் ராஜி.

வாடா கஜா … வரவேற்றவனிடம் 

சிஸ்டர வர்ற வழியில பார்த்தேன் …ஏதாச்சும் வேலைக்குப் போறாங்களா? பரவாயில்லடா உன் கஷ்டம் உணர்ந்து கைகொடுக்கறாங்க.

நீ வேற …. சீக்கிரமே ஒரு வேலையத் தேடிக்கணும் .சும்மாத்தானே இருக்கீங்கன்னுட்டு , ஊர் சுத்தக் கிளம்பிட்டாடா ….

இது என்னடா கொடுமை …தையல் வேலை செஞ்சு …கஷ்ட சூழ்நிலையில கைகொடுக்குறவள கேவலமாப் பேசினோம் …

இங்க என்னடான்னா நெலைமையே தலைகீழா..இருப்பே கொள்ளாமல் கிளம்பிவிட்டான் கஜேந்திரன் .

தோழி காமினி வீட்டிலிருந்து திரும்பியவள், ‘எப்படி நம்ம ஐடியா …இல்லாத காலரைத் தூக்கிவிட ….பெருவிரல் உயர்த்தித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராஜா. 

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!