வெள்ளை மெழுகு உள்ளே ஒளிரும்
வண்ண விளக்குகள் கண்ணுக்கும்,
காட்சிக்கும் விருந்தாய் ஜவுளிக்கடை வாயிலில்….
கடைச் சிப்பந்திகளும் ஏன் சமயத்தில்
முதலாளிகளே இருகரம் கூப்பி வாடிக்கையாளர்களை
வரவேற்ற நிலைமாற இருகரங்கள் பொம்மைக்குள்….
உள்ளே வெளியே விளையாட்டு காட்டி
வணக்கம் பகர்ந்து வரவேற்றிடும் அதிசய
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நாம்!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மெழுகு பொம்மை
previous post